தலைமுடி சிகிச்சை

தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்

இரவில் நாம் செய்யும் சில தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்க காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம்.

தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்
கூந்தல் உதிர்விற்கு பகல் சமயங்களில் உண்டாகும் மாசு, வெயில் போன்ற காரணமாக இருக்கலாம். ஆனால் அவை தவிர்த்து இரவுகளில் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம்.

சாதாரணமாகவே பகலில் இறுக்கிய குதிரை வால் போடுவது தவறு. இரவுகளில் குதிரை வாலுடனோ அல்லது இறுக்கி கூந்தலை பின்னுவதாலோ ரத்த ஓட்டம் குறைந்து முடி பலமிழக்கும். இதனால் அடர்த்தி குறைய வாய்ப்புகள் அதிகம். அதனால் தூங்கும்போது தலைமுடியை ஃப்ரீயாக விடுவது நல்லது.

இரவில் தலைக்கு குளித்தபடி அரைகுறையாக காயவைத்து தூங்குவது கூந்தல் பலமிழக்கச் செய்யும். இதனால் கூந்தல் உதிர்தல் அதிகம் உண்டாகும், நன்றாக காய்ந்தபின்தான் தூங்க வேண்டும்.

பருத்தி தலையணை நல்லதுதான். ஆனால் கூந்தலுக்கு நல்லதில்லை. கூந்தலில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை அவை உறிஞ்சிவிடும். முடி வறட்சி அதிகமாகி பிளவுகள் உண்டாகும்.

உங்களுக்கு அதிக வறட்சியான கூந்தல் என்றால், தூங்கி எழும்போது இன்னும் தலைமுடி வறண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு சரியான வழி தலைக்கு ஷவர் கெப்(Shower cap) அல்லது ஏதாவது ஒன்றால் தலையை கவர் செய்தபின் தூங்குவதுதான்.

இரவுகளில் திசுக்கள் வளரும் நேரம் என்பதால் அந்த சமயங்களில் தலையை படிய வாரினால் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து கூந்தல் திடமாகும். கூந்தல் ஊட்டம் பெற்று வளர்ச்சி பெறும்.201703031229326427 Mistakes for sleeping increases hair fall SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button