சூப் வகைகள்

பரங்கிக்காய் சூப்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் – 1/2 கப்,
பூண்டு – 4 பல்,
ஓட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பரங்கிக்காயை சதுரமாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காய், பூண்டு போட்டு 3-4 நிமிடங்கள் வதக்கவும். இதில் ஓட்ஸ் சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பரங்கிக்காய் வெந்தவுடன் இறக்கி ஆற விட்டு மிக்சியில் அரைக்கவும். பின் கடாயில் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும். sl4295

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button