ragi paal kolukattai 01 1472734193
சிற்றுண்டி வகைகள்

ராகி பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: பால் – 4-5 கப் சர்க்கரை – 1 கப் கெட்டியான தேங்காய் பால் – 1 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

கொழுக்கட்டைக்கு… ராகி மாவு – 1 கப் அரிசி மாவு – 1/2 கப் பால் – 1 கப் நெய் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் தண்ணீர் – 1/2 கப்

செய்முறை: முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை நீர் போன்று கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி, நெய் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் ராகி உருண்டைகளை சேர்த்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, 15 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.

ragi paal kolukattai 01 1472734193

Related posts

தேங்காய்ப்பால் காலிஃப்ளவர் சப்ஜி

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

ரவா இனிப்பு பணியாரம் சமைப்பது எப்படி..?

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan

சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான கோதுமை பாஸ்தா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

nathan