32.5 C
Chennai
Sunday, May 19, 2024
201704011528063606 evening snacks rice cutlet SECVPF 1
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் அதில் சூப்பரான கட்லெட் செய்யலாம். இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்
தேவையான பொருட்கள் :

வேகவைத்த சாதம் – 1 கப்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்,
புதினா இலை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

201704011528063606 evening snacks rice cutlet SECVPF

செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.

* அடுத்து அதில் சோள மாவு, சீரகம், பெருங்காயத்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம்மசாலா, சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து நன்கு கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான ரைஸ் கட்லெட் ரெடி.

* தக்காளி சாஸ் மற்றும் கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

Related posts

முட்டை சென்னா

nathan

வெஜ் சாப்சி

nathan

பிரட் போண்டா தீபாவளி ரெசிபி

nathan

சுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் லட்டு

nathan

சுவையான ஜிலேபி,

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan