கால்கள் பராமரிப்பு

வீட்டிலேயே எளிய முறையில் பாதங்களுக்கு பெடிக்யூர் செய்வது எப்படி?

பாதங்களின் ஆரோக்கியம் என்பது நீங்கள் நினைப்பதை விட மிகவும் முக்கியமானது. குதிகால் வெடிப்பு, பாத வறட்சி மற்றும் இதர பாத சம்பந்தமான பிரச்சனைகள் உடலின் முறையான இயக்கம் மற்றும் உடல் ஆதரவு மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றை பாதிக்கும்.

ஆகவே வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை செலவு செய்ய சொல்லவில்லை. நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: பால் – 2-4 கப் பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1 முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2 பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3 பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #4 அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

செய்முறை #5 இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

29 1480397631 6 applecidervinegarandhoney

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button