33.3 C
Chennai
Saturday, May 18, 2024
1477035271 1278
அசைவ வகைகள்

சைனீஸ் சிக்கன் பக்கோடா….

தேவையான பொருட்கள்:

கோழி கறி – 8 துண்டுகள்
வெங்காயம் – சிறிது
இஞ்சி – ஒரு தேக்கரண்டி
பூண்டு – ஒரு தேக்கரண்டி
சில்லி பேஸ்ட் – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று
ஸ்ப்ரிங் ஆனியன் – சிறிது
கார்ன் ஃப்ளார் – 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
அஜினோமோட்டோ – சிறிது (விரும்பினால்)
மைதா – சிறிது

செய்முறை:

எலும்பு இல்லாத சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோழி கறியுடன் இஞ்சி, பூண்டு, சில்லி பேஸ்ட், வெங்காயம், வெள்ளை மிளகு, அனைத்தையும் அரைத்து அதனுடன் உப்பு, அஜினோமோட்டோ போட்டு கார்ன் ஃப்ளார், மைதா, முட்டை சேர்த்து நன்கு கலந்து ஊற விடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சைனீஸ் சிக்கன் பக்கோடா தயார்.1477035271 1278

Related posts

சிக்கன் லெக் பீஸ் வறுவல் | Leg Piece Chicken Fry

nathan

ஸ்பைசி கோங்குரா (புளிச்சக்கீரை) சிக்கன் செய்ய தெரிந்து கொள்வோம்…..

nathan

திருநெல்வேலி ஸ்டைல்: சிக்கன் குழம்பு

nathan

சூப்பரான பேசில் தாய் சிக்கன்

nathan

காடை வறுவல் செய்முறை விளக்கம்

nathan

சில்லி சிக்கன் கிரேவி

nathan

ஆனியன் சிக்கன் வறுவல்

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

கோங்குரா சிக்கன்

nathan