28.6 C
Chennai
Saturday, May 18, 2024
1478072675 9938
சிற்றுண்டி வகைகள்

ரவா இனிப்பு பணியாரம் சமைப்பது எப்படி..?

தேவையான பொருட்கள்:

ரவா – 1 கப்
மைதா – 1கப்
சர்க்கரை – 1.5 கப்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலந்து வைத்துள்ள கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன் நிறம் வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.

குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். மிக எளிதாகவும் செய்திடலாம்.1478072675 9938

Related posts

மட்டர் தால் வடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

nathan

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

சத்தான சுவையான கேழ்வரகு ரவா தோசை

nathan

அதிரசம்

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

சுவையான… இனிப்பு தட்டை

nathan

ஹராபாரா கபாப்

nathan

சத்தான… கருப்பட்டி ராகி கூழ்

nathan