இலங்கை சமையல்

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு

குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு முறுக்கி செய்து கொடுக்கலாம். இன்று இந்த முறுக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 3 கிண்ணம்
அரிசி மாவு – 2 கிண்ணம்
உளுந்து மாவு – 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி – சிட்டிகை
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

* அடுத்து கேழ்வரகு மாவை போட்டு வறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் அரிசி மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும்.

* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* கேழ்வரகு முறுக்கு ரெடி.

* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும். ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)201705151537221810 super snacks ragi murukku SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button