சரும பராமரிப்பு

உங்களுக்கு எந்த மாதிரியான சருமம்? எப்படி தெரிஞ்சுக்கலாம்?

நீங்கள் உங்கள் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்கள் முதலில் தங்கள் சருமம் எந்த வகையை சார்ந்தது என்று அறிந்து கொள்ளுவது அவசியம். தங்கள் தோலுக்கு பொருந்தாத அலங்கார பொருட்களை பயன்படுத்துவது சருமத்துக்கு கேடு விளைவிக்கலாம்.

பெரும்பலானவர்கள் தங்களின் தோலின தன்மை பற்றி அதிகம் அறிந்து வைத்திருப்பதில்லை. வறண்ட சருமத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும், எண்ணை பசையான சருமத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும் வெவ்வேறானது. சருமத்தின் தன்மையை அறிந்து கொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.

சாதாரண சருமம்:
இந்த வகை சருமத்தை கொண்டவர்களை அதிர்ஷ்டசாலிகள் எனலாம். இந்த சருமம் வறட்சியாகவும் இருக்காது. எண்ணெய் பசையோடும் இருக்காது. அதே போல இந்த வகை சருமத்தில் வெடிப்புகளும் ஏற்படாது. நாள் முழுதும் ஒரே போல காணப்படும்

எண்ணைப் பசையான சருமம்:
மதியப் பொழுதுகளில் இந்த வகை சருமத்தை கொண்டவர்களின் தோல் பிசிபிசுப்பாக காணப்படும். முகப் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் இந்த சருமத்தில் தோன்ற வாய்ப்ப்புகள் அதிகம்.
எனவே இத்தகைய சருமத்தை கொண்டவர்கள் தங்கள் சருமத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முகத்தை சுத்தம் செய்ய சாலிசிலிக் அமிலம் கொண்ட முகம் கழுவும் சோப்புகளை பயன்படுத்துவது பயனளிக்கும்.

வறண்ட சருமம்:
குளிர் காலங்களில் இந்த வகை சருமம் ரப்பர் போல நீட்சி அடையக் கூடியதாக இருக்கும். சில நேரங்களில் சிரிப்பது முதலான முகத்தை அசைய வைக்க கூடிய செயல்கள் வழியும் ஏற்படுத்தலாம்.
மற்ற சருமங்களோடு ஒப்பிடும்போது சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையக் கூடியது இந்த சருமம். சருமத்தை எப்போதும் ஈரப் பசையோடு வைத்திருப்பது பாதிப்புகளை தடுக்க உதவும்.

கலவையான சருமம்:
இந்த சருமம் சில இடங்களில் உலர்வாகவும், சில இடங்களில் எண்ணைப் பசையாகவும் இருக்கும். t ஜோன் என்று கூறப்படும் மூக்கு மற்றும் நெற்றிப் பகுதியே எண்ணெய்ப் பசையோடு இருக்கும். தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உங்கள் தோல் மாறினால் நீங்கள் கலவை சருமத்தை கொண்டிப்பதாக அறியலாம்.

சென்ஸிடிவ் சருமம்:
தோலில் தடிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இந்த வகை சருமத்தில் ஏற்படும். இந்த வகை சருமத்தை உடையவர்கள் தோல் மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கான சோப்பு மற்றும் பவுடர்கள் இந்த சருமத்துக்கு பொருந்தும்.

09 1483957111 1 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button