கேக் செய்முறை

சாக்லெட் ஸ்பான்ஞ் கேக்

என்னென்ன தேவை?

பெரிய சைஸ் முட்டை – 6,
பொடித்த சர்க்கரை – 200 கிராம்,
மைதா – 125 கிராம்,
கோேகா பவுடர் – 25 கிராம்,
எண்ணெய் – 100 மி.லி.,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
பைனாப்பிள் எசென்ஸ் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முட்டையின் வெள்ளை கரு, மஞ்சள் கருவை தனியாக பிரித்து வைக்கவும். வெள்ளை கருவை எலெக்டிரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் அதில் முட்டையின் மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும். பிறகு எண்ணெய் மற்றும் பைனாப்பிள் எசென்ஸ் ஊற்றி கலந்து வைத்து, பின் மைதா, கோகோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு கட்டியில்லாமல் கலந்து, வெண்ணெய் தடவிய கேக் டின்னில் ஊற்றி 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 45-50 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்து, ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

Related posts

பனீர் கேக்

nathan

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

இதோ சுவையான சாக்லெட் புடிங்

nathan

Leave a Comment

%d bloggers like this: