கை வேலைகள்பொதுவானகைவினை

அழகிய ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங் (stained glass painting)

கருப்பு கிளாஸ் லைனரில் வரைந்தது

2013-03-06 13.46.53

தனிப்பட்ட அழகுடைய ஸ்டெயின்  கிளாஸ் பெயின்டிங்கை சுலபமாக  ஒரே நாளில் செய்து விடலாம். பெரிய ஜன்னல்  கண்ணாடிகளிலும் வரையலாம். இதை வரையும் போது சமமான தளத்தில் கண்ணாடியை  படுக்க வைத்து  பெயின்ட் செய்து  அப்படியே  காயவிடவேண்டும்.காய்வதற்கு முன் சாய்த்தால்  வர்ணங்கள்  வழிந்து விடும்.

                                         பிளெயின் கிளாஸ் (plain glass) , மற்றும்             பனிமூட்டம்போன்ற கண்ணாடிகளிலும்  இதை வரையலாம்.  பிளெயின் கிளாசில் வரைந்தால் வேண்டிய நிறங்களில் அட்டைகளை பின்புறம்  வைத்து  பிரேம் செய்ய வேண்டும்.
                                    வேறுவிதமாகவும் செய்யலாம்.அலுமினியம் ஃபாயிலை பின்புறம் வைத்தும் பிரேம் செய்யலாம். ஃபாயிலை சிறிது  கசக்கியபின் கிழியாமல் பிரித்து வைத்துப்பயன்படுத்த வேண்டும்.

தேவையானவைகள்
                                     1.  கிளாஸ் லைனர்  ( கருப்பு, சில்வர், கோல்டு, காப்பர்-
                                                                      இதில் தேவையானதை எடுக்கவும்)
2.  கிளாஸ் கலர்கள் (வாட்டர் பேஸ், ஆயில் பேஸ்-
என இருவகையில் கிடைக்கும்).
3.    3m.m  கண்ணாடி. (சாதாரண(plain glass) அல்லது
புகைமூட்டம் போன்ற கண்ணாடி
தேவையான அளவில்).
4.   பிரஷ்.
5.   அலுமினியம் ஃபாயில்(aluminium  foil).

முதலில் கண்ணாடியை  சோப்புப்போட்டுக் கழுவி துடைத்தபின் வேண்டிய படத்தை கண்ணாடியின் கீழ்  வைத்து மேற்புறம்தெரியும் படத்தின் மேல்  கிளாஸ் லைனரால் வரைந்து கொள்ளவும். லைனர்கண்ணாடியில் ஒட்டாமல் சிறிது தூக்கி இருந்தாலும் அதன் வழியே வர்ணங்கள்கசிந்து பக்கத்திலுள்ள நிறங்களுடன் கலந்துவிடும். நான்கு மணி நேரத்தில் லைனர்காய்ந்து விடும். பிறகு கிளாஸ் கலரை பிரஷ்சில் எடுத்து லைனரால் கரைகட்டப்பட்ட இடங்களில் விடவும்.அது தானாகவே பரவிக்கொள்ளும்.  காற்றுக்குமிழ்கள் இருந்தால் ஊசியால் தொட்டு உடைத்து விடவேண்டும். மேலும்,பிரெஷ்சால்கலரைப் பரப்பிவிடும் போது கலரானது லைனரின் மேற்புறங்களில் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.லைனர் பளிச்சென்று தெரிந்தால்தான் படம் அழகாக இருக்கும்.

டிராப்பர் மூடி பொருத்தப்பட்ட பாட்டில்களில் வரும் கலர்கள் எனில்,வேண்டிய இடங்களில் வைத்து லேசாக அழுத்தினால் சுலபமாகப் பரவிக்கொள்ளும். ஆனால் இதில் காற்றுக்குமிழ்கள் அதிகமாக  வர வாய்ப்புள்ளது. மேலும், ஷேடு செய்யும் போது  மட்டும் வாட்டர் பேஸ்.  ஆயில் பேஸ் கலர்களைக் கலக்கக்கூடாது. இரண்டும் சேர்ந்து கொள்ளாது.
பெயின்ட் செய்தபின் தூசி படாமல் காயவிடவும். 5-மணி நேரத்தில் நன்கு காய்ந்து விடும். பின், விரும்பிய பேக்ரவுண்ட் வைத்து பிரேம் செய்யவும். இவ்வகை ஓவியங்களை நேரடி சூரிய ஒளி படும் இடங்களில் வைத்தால் வண்ணங்களில் சுருக்கம் விழுந்து கெட்டுவிடும்.ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங்கின்  அழகுக்கு  முதல் காரணம் கிளாஸ் கலர்களின் சிறப்பான அழகுதான். இரண்டாவதுதான் வரைபவர் திறமை எனலாம். வரைந்து பாருங்கள்.

  கருப்பு கிளாஸ் லைனரில் வரைந்தது

2013 03 06+13.46.53

வெள்ளை(silver)  லைனரில் வரைந்தது

2013 03 06+13.43.10

வெள்ளை லைனரில் வரைந்தது

2013 03 06+13.44.18

கோல்டு  லைனரில் வரைந்தது

2013 03 04+13.48.19

 லுமினியம் ஃபாயில் பேக்ரவுண்ட் ஓவியங்கள்

IMG 0929
IMG 0927

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button