30.3 C
Chennai
Sunday, May 19, 2024
20 1487575569 4 straighthair
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?

அதற்கு இஞ்சியை தலைமுடி பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம்.

தலைமுடி உதிர்வை நிறுத்த… தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஒரு இஞ்சி துண்டை நேரடியாக ஸ்கால்ப்பில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்றுவிடும்.

பொடுகுத் தொல்லை நீங்க… இஞ்சி சாற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஸ்கால்ப்பில் சுரக்கும் எண்ணெயின் அளவைக் குறைக்கும் மற்றும் ஸ்கால்ப்பில் தொற்றுகளால் பொடுகு வருவதைப் போக்கும். அதற்கு இஞ்சி சாற்றால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து அலச வேண்டும்.

ஸ்கால்ப் காயங்களை சரிசெய்ய… தலையில் பொடுகு இருக்கும் போது ஏற்படும் அரிப்பால், சிலருக்கு தலையில் காயங்களே ஏற்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு ஸ்கால்ப்பில் பருக்கள் வரும். இப்பிரச்சனைகளைப் போக்க இஞ்சி சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள்.

பொலிவான தலைமுடியைப் பெற… இஞ்சி சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடியின் பொலிவு அதிகரிக்கும்.

வறட்சியான முடிக்கு… தலைமுடி மிகவும் வறண்டு உள்ளதா? அப்படியெனில் இஞ்சி சாற்றில் அர்கன் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் அதிகப்படியான வறட்சியால் மென்மையின்றி இருக்கும் தலைமுடி மென்மையாகும்.

20 1487575569 4 straighthair

Related posts

உங்களுக்கு ஹேர் டை போட்டபின் பிடிக்கலையா? பழைய நிறத்திற்கு மாறுவதற்கு சில டிப்ஸ்

nathan

தலை முடியின் பராமரிப்புகள்

nathan

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பொருட்களை கலந்து இப்படி தடவினா போதும்!

nathan

கொட்டும் தலைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல உங்க ஷாம்புவோட இதெல்லாம் கலந்துக்கோங்க…

nathan

கறிவேப்பிலையுடன், நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை.

nathan

உங்களுக்கு தெரியுமா முடி கொட்டுவது தடுத்து வளர கவனத்தில் கொள்ள வேண்டியவை!

nathan

தேயிலை மர எண்ணெயை முடி உதிர்தலுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? இப்டி ட்ரை பண்ணுங்க!!

nathan

8 வழிகள் முடியின் பளபளப்பையும் அடர்த்தியையும் அதிகரிக்க நீங்கள் சில உபாயங்களை பின்பற்றலாம்

nathan