மருத்துவ குறிப்பு

வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்? என்று தெரியுமா ?

நமது வீட்டில் நிகழும் சுபகாரியங்களுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். அதுவும் பூ பூத்துக், காய் காய்த்த வாழை மரத்தைத் தான் தேர்ந்தெடுத்துக் கட்டுவோம்.
80
நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்குக் கற்பிக்கப்பட்ட காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை.
82
அந்த காலத்தில் திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது. வாழை மரம் போல மனிதனின் வாழ்வும் வாழையடி வாழையாகத் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்டது.
81
இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.
83
வீட்டில் சுபநிகழ்ச்சி என்றால் ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள், போவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் விடும் மூச்சு காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும். அத்துடன் கூட்டம் அதிகப்படியாகச் சேரும் போது அவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை ஒன்றாகச் சேரும் போது ஒதுவித மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வீட்டில் கட்டியிருக்கும் மா இலை தோரணங்கள், வாழை மரங்களும் ஒன்று சேர்ந்து காற்றில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தைக் குறைக்கும். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது வாழை மரம்.
81
வாழைக்கு பொதுவாகவே தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உண்டு. சிலருக்குத் திருமணம் நடைபெறுவதில் களத்திர தோஷமும், ஒரு சிலருக்கு இரண்டு திருமணம் என்றும் ஜாதகத்தில் இருக்கும். அந்தத் தோஷத்தை களைவதற்கு வாழை மரத்துக்குத் தாலி கட்டி சாங்கியம் செய்வதுண்டு. அவ்வாறு செய்வதினால், இரண்டாவதாக நடைபெறும் திருமண பந்தம் எந்தவித பங்கமும் இன்றி வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
80
மேலும், வீட்டில் விசேஷம், நல்ல காரியங்கள் நடைபெறும் போது வீட்டிற்கு எந்தவித கண் திருஷ்டியும் அண்டாமல் நம்மைப் பாதுகாக்கும் என்பதற்காகவும் வாழை மரத்தை வாசலில் கட்டுகிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button