மருத்துவ குறிப்பு

கல்சியக் குளிசைகளும் மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா வகைகளும் : வைத்தியர்.சி.சிவன்சுதன்

உடம்பு உளைவுகளுக்கும், மூட்டுவலிகளுக்கும் கல்சியக் குறைபாடுதான் காரணம் என்ற ஒரு தப்பபிப்பிராயம் நிலவுகிறது. இதனால் மூட்டுநோ, நாரிநோ ஏற்பட்டவுடன் கல்சியக் குளிசைகளையும் மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட மாவகைகளையும் மக்கள் பாவிக்க தலைப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்திலே எமது குடிதண்ணீரில் பெருமளவு கல்சியம் இருக்கின்றது. இந்த அதிகரித்த கல்சியத்தின் அளவால் ஏதாவது பிரச்சினைகள் தோன்றிவிடுமோ என்ற ஏக்கமும் இருக்கிறது.

அத்துடன் யாழ்ப்பாண உணவிலும் போதியளவு கல்சியம் இருக்கிறது. இந்த நிலையில் எமக்கு மேலதிக கல்சியக்குளிசைகள் தேவை தானா என்ற கேள்வி எழுகிறது. கல்சியம் அளவுக்கதிகமாக உள்ளெடுக்கப்பட்டால் மாரடைப்பு ஏற்படும் வீதம் அதிகரிப்பதுடன் இன்னும் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படமுடியும்.

மேலைத்தேய நாடுகளிலே கல்சியக் குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன் காரணமாகப் பல நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் அந்தநாடுகளிலே கல்சியக் குளிசைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருகின்றன.

மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் எமது உறவினர்கள் நல்லநோக்கத்துடன் இந்தக் கல்சியம் கொண்ட சத்துக் குளிசைகள் நிரம்பிய போத்தல்களை இங்கு இருக்கும் தமது உறவினர்களுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

அந்த குளிசைகளை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எமது மக்களும் பெருமளவில் பாவித்து வருகின்றனர்.

எமது பகுதிகளில் விற்ற மின்னுகுறைபாடு ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தநிலை உள்ளவர்களுக்கு உடலில் கல்சியத்தின் அளவு குறை வடைய முடியும். இந்த நிலை உள்ளவர்கள் விற்றமின் Dயையும் கல்சியத்தையும் உள்ளெடுக்கலாம்.
cal
ஆனால் சுகதேகியாக இருப்பவர்களுக்கு எமது நீரிலும் அன்றாட உணவிலும் இருக்கும் கல்சியம் போதுமானதாகவே இருக்கிறது. இதற்கும் மேலதிகமாக கல்சியக் குளிசைகளை உட்கொண்டால் உடற்சுகம் பாதிக்கப்படலாம். சிலநோய் நிலைகளில் எமக்குமேலதிகமான கல்சியக் குளிசைகள் பாவிக்கவேண்டியதேவை இருக்கிறது.

உதாரணமாக எலும்பு சம்பந்தமான சில நோய்கள், சிறுநீரகத் தொழிற்பாடு குறைவடைந்தநிலை, சில குடல் சம்பந்தமான நோய்கள், சிலவகை மூட்டு நோய்கள் போன்ற நோய் நிலைகளில் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கல்சியக் குளிசைகளைப் பாவிக்கமுடியும். வைத்திய ஆலோசனை இன்றிக் கல்சியக் குளிசைகள் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

உடல் நோவுக்கோ, மூட்டு நோவுக்கோ அல்லது நாரிநோவுக்கோ நாம் உள்ளெடுக்கும் கல்சியத்தின் அளவு குறைந்து இருப்பதுதான் காரணம் என்ற தப்பபிப்பிராயத்தை புரிந்து கொள்ளமுயலுவோம்.

இயற்கையான உணவு வகைகளும் சூரிய ஒளியும் எமது ஆரோக்கியத்தை பேண போதுமானவை என்பதை மனதில்
நிறுத்துவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button