முகப்பரு

பாவக்காய் உங்க முகப்பருக்களை குணப்படுத்தி சூப்பரான ஸ்கின் டோன் தரும்! எப்படி தெரியுமா?

இந்தியாவில் பாகற்காய் ‘கரேலா” என்று அழைக்கப்படும். பாகற்காய் காய்கரி வகைகளிலேயே மிகக் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. பாகற்காயில் கசப்புத்தன்மை அதிகமாக உள்ளதால் இதனை பலர் உணவில் சேர்த்து கொள்வதில்லை. பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. அதனால் உங்கள் உடல் நலத்திற்கு மிகுந்த பயனை கொடுக்கும். பாகற்காயை சருமத்தின் மேல் உபயோகித்தால் அது அழகு சம்பந்தமான பயன்களை கொடுக்கும்.
bittergaurd 27 1495878670
உடல் நலத்தை நன்கு பாதுகாத்து கொள்ள பாகற்காய் சாறு உபயோகப்படுகிறது. தோல் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்கு இது பயன்படுகிறது. பாகற்காய் சாறு அருந்துவதால் தோல் மற்றும் கூந்தலுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் -சி மற்றும் நார்சத்துகள் கிடைக்கின்றன. கீரை வகையில் உள்ள கால்சியத்தை விட இரண்டு மடங்கு கால்சியம் பாகற்காயில் உள்ளது. உங்கள் அழகினை பாகங்காய் எவ்வாறு அதிகப்படுத்துகிறது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
27 1495878794 1
1.ஒளி வீசும் தோல்:
பாகற்காய் முகத்தில் உள்ள அழுக்கினை போக்கி ஒளி வீசும் ஆரோக்யமான தோலினை கொடுக்கிறது. பாகற்காயில் உள்ள வைட்டமின் மற்றும் ப்ரோடின் சத்து அந்த அழுக்குகளை அடியோடு விரட்டிவிடும். சிறிதளவு பாகற்காய் சாற்றினை முகத்தில் பூசி கழுவ வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த முறையில் செயல்பட்டால் தோல் ஒளி வீசும் தன்மையை பெற்றுவிடும்.
27 1495878803 2
2. தோல் அரிப்பிற்கான சிகிச்சை :
உங்களுக்கு தோல் அரிப்பு மற்றும் தோல் வீக்கம் இருந்தால் பாகற்காய் சாறு அதனை கட்டுப்படுத்தும். பாகற்காயை சிறு துண்டுகளாக அரிந்து அதனை பசை போல் அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை சாற்றினை கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி விட வேண்டும். இதன் மூலம் தோல் அரிப்பினை போக்க முடியும்.
27 1495878831 3
3.முகப்பரு சிகிச்சை:
பாகற்காயில் நுண்ணுயிர் கிருமிகளையும் கடும் வீக்கத்தையும் போக்கும் தன்மை உள்ளது. இதனால், முகத்தில் தோன்றும் தேவையற்ற முகப்பரு கோளாறுகளை சரி செய்ய உதவும் . பாகற்காயை சிறிது எடுத்து அரைத்து பசை போல் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது ஜாதிக்காய் பவுடர் மற்றும் தயிர் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்
27 1495878812 4
4. சூட்டு கொப்பளங்களை போக்கும் தன்மை:
பாகற்காயில் அதிகளவு நார்சத்து மற்றும் ப்ரோடின் சத்து உள்ளது. இதன்மூலம் சூட்டு கொப்பளங்களை தவிர்க்க முடியும். சிறிது பாகற்காயை நீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீர் வெளிர் பச்சை நிறத்தை அடைந்தவுடன் அதனை குளிர்விக்க வேண்டும். சிறிது காட்டன் துணியின் மூலம் அதனை எடுத்து தோலின் மேல் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வெயில் காலத்தில் தோலின் தன்மையை பாதுகாக்க முடியும்.
27 1495878821 5
5. தோல் எரிச்சலுக்கான சிகிச்சை:
உங்கள் தோல் வறட்சி மிகுந்து அரிப்பு தன்மையுடன் இருந்தால், பாகற்காயின் மூலம் தோல் எரிச்சலை போக்க முடியும். பாதி பாகற்காயை வெட்டி அதனை பசை போல் செய்து கொள்ள வேண்டும். கருவேப்பிலையை நன்றாக காய வைத்து பொடித்து இரண்டு கரண்டி அளவு அந்த பாகற்காய் பசையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தோலின் மேல் பூச வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும். இதன்மூலம் தோல் அரிப்பு மற்றும் தோல் எரிச்சலை தடுக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button