30.9 C
Chennai
Wednesday, May 22, 2024
13 5
மருத்துவ குறிப்பு

கண் கட்டி மற்றும் விஷத்தை விரட்டும் நெல்லிக்கனியின் அருமை உங்களில் எதனை பேருக்கு தெரியும்?

கொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால் உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும். இதை தடுக்க வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம்.
13 5
நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு (இரண்டு நெல்லிக்காய்) மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், சர்க்கரையை சேர்க்காமல் குடிக்கலாம். இதயக்கோளாறு, நரம்பு தளர்ச்சி, இளநரை இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வரலாம்.
Untitled 2
கீல்வாதம், நரம்பு தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாக பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து குடிக்கலாம். நெல்லிக்கனியை உலர்த்தி பொடியாக்கி உடம்பில் தேய்த்துக் குளித்தால் சொறி, தோல் சுருக்கம் நீங்கும். உலர் நெல்லியை நீரில் போட்டு ஊற வைத்து கண்களை கழுவி வர கண் நோய்கள் குணமாகும்.
ds01089 im00214 c7 mouth cancer picturethu jpg 1
வாய்ப்புண் குணமாக நெல்லி இலையை சிறிது எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால் போதும்.
03 1380784873 4 lemon 2
நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து நரை முடி மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான நீரில் தொடர்ந்து குளித்து வர நரை முடி மறையும். நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி நன்கு ஊறியதும் குளித்தால் முடி நன்கு செழித்து வளரும்.
08 1491642414 6 hair3
இதில் முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும். நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப்போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து குடிக்க சளி, தும்மல் நீங்கும்.
milk day 625 625x350 71433091943
பாலில் நெல்லிப்பொடியை கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய் விட்டு கலக்கி குடித்து வர கக்குவான் இருமல் குணமாகும். நெல்லிச்சாறுடன் சந்தனம் அரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும். நெல்லிச்சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.
12 1439360738 6 stomach 1
நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். நெல்லி வற்றலுடன் வில்வ இலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

Related posts

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. ஆலோசனை வழங்கவும்.

nathan

உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!

nathan

நீரில் சீரகப் பொடியை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

nathan

தைராய்டு பிரச்சனை வராமல் இருக்கணுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

இவ்வளவு விஷயத்திற்கு பயன்படுத்த முடியுமா முடக்கற்றான் இலையையும், வேரையும் ?????

nathan

மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு… முதலுதவியாக என்ன செய்யலாம்..?

nathan

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

மாதக்கடைசியில் பணம் இல்லாமல் அவதியா? இதோ ஐடியா

nathan