மருத்துவ குறிப்பு

40 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் எடையை குறைக்கணுமா?உங்களுக்காக டிப்ஸ்!!

இன்றைக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்களின் முதன்மையான பிரச்சனையாக இருப்பது எடை தான். ஒபீசிட்டி வந்தால் அதனை பின் தொடர்ந்து பல்வேறு உடல் நலக்கோளாறுகள் வந்திடும்.

உடல் எடையை குறைப்பதில் இளம் பருவத்தினரை விட 40 வயது கடந்தவர்களுக்கு தான் சிரமங்கள் அதிகம். வயதானதும் உடல் உழைப்பு குறைந்திடும்,ஹார்மோன் மாற்றங்கள்போன்ற காரணங்களால் எடை குறைப்பது என்பது இயலாத காரியமாய் இருக்கும்.

காய்கறி மற்றும் பழங்கள் :
உணவுகளில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக கலோரி உள்ள உணவுகள், போன்றவற்றை
கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

காலை உணவு :
காலை உணவை தவிர்க்காதீர்கள். காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகப்படியான உணவு சாப்பிடத்தோன்றும். ஒவ்வொரு நேரமும் சாப்பாட்டின் அளவு வேறு படும் போது, ஜீரணத்திற்கான நேரமும் வேறுபடும்.

இரவு உணவு : இரவுகளில் குறைவான உணவுகளை, குறைந்த அளவிலான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக மசாலா உள்ள பொருட்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.

அன்றாட உணவில் கவனம் : வேலை,குடும்பம் என்று என்னதான் பிஸியாக இருந்தாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கவனமாக இருக்கவேண்டும், உணவில் இருக்கும் கலோரி, அவை செரிமானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும், அதிகமான கொழுப்பு உணவுகளை எடுக்கிறீர்களா என்று கவனமாக இருங்கள்.

சோடா : இனிப்பு நிறைந்த டீ, காஃபி,எனர்ஜி டிரிங்க்ஸ்,சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை குடிப்பதை தவிர்த்திடுங்கள். இது உங்கள் உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்.

ஆல்கஹால் : அதே போல ஆல்கஹால் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஒரு கிளாஸ் பீர் அல்லது வைன் குடித்தால் 150 கலோரிகள் இருக்கும். அதையே அதிகமாக குடித்தால் உடலில் சேரும் கலோரிகளின் அளவு அதிகரிக்கும். ஆல்கஹால் குடித்தால் உங்களுக்கு பசியும் அதிகரிக்கும். இதனால் அதிகப்படியான உணவுகளை எடுத்துக் கொள்வீர்கள்.

கவலை : உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு மன அமைதிக்கும் இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படுவதால் தான் உடலில் பல்வேறு வியாதிகள் ஏற்படுகிறது. அதனால் தியானம், யோகா , மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம். அதிக கோபம் வரும் போதோ அல்லது நீங்கள் சோர்வாகும் போது உங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்யுங்கள்.

ஆழ்ந்த தூக்கம் : நாற்பது வயதிற்குப் பிறகு ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை தவிர்க்க வேண்டுமானால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூக்கம் குறைவாக இருந்தாலும் எடை கூடும். தினசரி வேலைகளை கவனம் செலுத்துவது போலவே தூங்கும் நேரத்தையும் கண்காணியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button