30.5 C
Chennai
Friday, May 17, 2024
08 1431070439 1 neem
முகப் பராமரிப்பு

ஆயுர்வேத மூலிகையான வேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்?

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேப்பிலை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு அழற்சி, நோயெதிர்ப்பு அழற்சி போன்றவை அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், பருக்கள், சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம். சரி, இப்போது எந்த பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் வேப்பிலையைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.
08 1431070439 1 neem
அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும்
ஒரு கையளவு வேப்பிலை மற்றும் துளசி இலையை வெயிலில் உலர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதில் சிறிது சந்தனப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.
08 1431070445 2 blackheads
கரும்புள்ளி மற்றும் வெள்ளை புள்ளிகளை நீக்க.
வேப்பிலையை அரைத்து அதில் சிறிது தேன், பால் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, வாரத்திற்கு மூன்று முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்துளைகள் விரிவடைந்திருந்தால் அவை சுருங்கும் மற்றும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளின் பிரச்சனைகளில் இருந்து விடைபெறலாம்.
08 1431070451 3 neem
தழும்புகளை போக்க.
வேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, உல வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்கலாம்.
08 1431070458 4 acne
முகப்பரு
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க, கொதிக்கும் நீரில் வேப்பிலையை சேர்த்து, வேப்பிலை மென்மையானதும், அதனை எடுத்து அரைத்து, அத்துடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்கள் போய்விடும்.
08 1431070464 5 facepack
பொலிவான சருமத்திற்கு.
சிறிது வேப்பிலை பொடியுடன், கடலை மாவு, 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து நன்கு காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நிச்சயம் பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

Related posts

கருமையான உதடுகளை சிவப்பாக்க சூப்பர் டிப்ஸ்…!

nathan

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்க பற்களில் கறையா?அப்ப இத படியுங்க…

nathan

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால்……?

nathan

உங்களுக்கு தெரியுமா! இந்த வடிவ பற்களை உடையவர்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள்!

nathan

உங்களுக்கு வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா?

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ்

nathan