30 C
Chennai
Wednesday, May 22, 2024
kuru uzum
ஆரோக்கிய உணவு

உலர் திராட்சையில் அப்படி என்னதாங்க இருக்கு! வாங்க பார்க்கலாம்.!

குழந்தைகளோ, பெரியவர்களோ. கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக்கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் எக்கச்சக்கம். அவற்றைப் பற்றி விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் வாலந்தீனா குரைசி.

ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

* திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட ஏராளமான சத்துக்களும் பலன்களும் இருக்கின்றன. உதாரணமாக, 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும்.
kuru uzum
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். இது, புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக, பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும்; ஆரோக்கியம் கூடும்; ரத்தசோகை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். .தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும்.

meo tri tao bon cho tre 10* வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.

* இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்.

* உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை. உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும்.

* சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது.

ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது.

Related posts

உடலில் உள்ள அதிகளவு அமிலத்தை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி

nathan

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்க உணவில் தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் கொத்தவரங்காய்..!

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையான முகம் முதல் முகப்பரு வரை, அனைத்திற்கும் பயன்படும் ட்ராகன் பழம்..!

nathan

காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தேனில் ஊறவைத்து வெங்காயத்தை சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா..?

nathan

குறைந்தது 50 வயது வரை உயிருடன் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கங்கள்!!!

nathan