மருத்துவ குறிப்பு

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? இதோ அற்புதமான சில வீட்டு வைத்தியங்கள்!!!

இன்றைய அவசர உலகில் அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணால் பலர் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு சரியான வேளையில் சாப்பிடாமல் இருப்பது தான் முக்கிய காரணம். அல்சர் வந்தால், கடுமையான வயிற்று வலியுடன், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் அல்சர் பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அல்சர் பிரச்சனை ஆரம்பமானால், அதனை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி அறுவை சிகிச்சை செய்யுமளவு கொண்டு சென்றுவிடும். சரி, இப்போது அல்சர் பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போமா!!!

குளிர்ந்த பால் அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் குளிர்ந்த பால் குடிப்பது நல்லது. இதனால் நெஞ்செரிச்சலைத் தணிக்கும்.

பாதாம் நீரில் ஊற வைத்து, தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்பு சாப்பிடுவது அல்லது பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது.

நெல்லிக்காய் சாறு அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடித்து வருவது நல்லது.

வாழைப்பழம் தினமும் 2-3 வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.

வில்வ இலைகள் தினமும் 1-2 வில்வ இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால், வயிற்றுப் புண் சரியாகும்.

முட்டைக்கோஸ் முட்டைக்கோஸை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளை பூசணி ஜூஸ் அல்சர் இருப்பவர்கள், வெள்ளை பூசணியை ஜூஸ் போட்டு குடித்து வருவது நல்லது.

புளித்த மோர் நன்கு புளித்த மோரை அல்சர் இருப்பவர்கள் குடித்து வந்தால், மோரில் உள்ள பாக்டீரியா, வயிற்றுப்புண்ணை குணமாக்கும்.3334

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button