29.2 C
Chennai
Friday, May 17, 2024
onion 1
தலைமுடி சிகிச்சை

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க

தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் முக்கிய காரணம். இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு முடி அதிகமாக கொட்டினால், கண்ட எண்ணெயைப் பயன்படுத்தாமல் வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வது நிற்பதோடு, முடியின் வளர்ச்சியையும் காணலாம். சரி, இப்போது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

வெங்காய தண்ணீர் ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். வெங்காயம் மென்மையானதும், நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்

தேங்காய் எண்ணெய் சுத்தமான தேங்காய் எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். அத்தகைய தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வெங்காய சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

ரம் ஒரு சிறு பாத்திரத்தில் வெங்காய சாற்றினை ஊற்றி, மிதவான தீயில் சூடேற்றி, பின் அதில் 60 மி.லி ரம் உடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரும்.

தேன் 1 கப் வெங்காய சாற்றில் தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச, மயிர்கால்களின் வலிமை அதிகரிப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை முதலில் தலையில் தடவி, பின் 15 நிமிடம் கழித்து வெங்காய சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனாலும் தலைமுடி நன்கு வளரும்.

பீர் பீர் மிகவும் பிரபலமான ஓர் மதுபானம். இந்த பீரும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு தலைமுடியை பீர் கொண்டு அலசி, 8 மணிநேரம் கழித்து, வெங்காய சாற்றினைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர முடி உதிர்வது குறையும். இந்த முறையை அப்படியே கோடையில் தலைகீழாக செய்தால், அதாவது முதலில் வெங்காய சாற்றினைப் பயன்படுத்தி, பின் பீரால் தலைமுடியை அலச, இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வெங்காய ஜூஸ் தலைமுடியை நீரில் ஒருமுறை அலசி பின் வெங்காய சாற்றினைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனாலும், மயிர்கால்கள் வலிமைப் பெறும் மற்றும் நன்கு வளர்ச்சியடையும்.
onion 1

Related posts

தெரிந்து கொள்ளுங்கள்.. கருப்பு முடி விரைவாக கருப்பு நிறமாக இருக்க இதை செய்ய வேண்டும்…

nathan

இளநரைக்கான வீட்டு சிகிச்சை

nathan

உங்க இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த கேப்சியூல் மட்டும் இப்படி தடவினா போதும்… பொடுகு முழுசா நீங்கி முடி வேகமா வளரும்

nathan

ஷாம்புவா? இல்லை கண்டிஷனரா? எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?

nathan

உங்களுக்கு சுருட்டை முடியா? இந்த மாஸ்க் போடுங்க…

nathan

கூந்தல்‬ சீவும் முறை

nathan

40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது?

nathan

தாங்க முடியாத பொடுகுத் தொல்லை! இதோ அற்புதமான எளிய தீர்வு…

nathan