முகப் பராமரிப்பு

நீங்கள் வெள்ளையாவதற்கு இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!இதை படிங்க…

நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும் போது, சருமம் பொலிவு இழந்து புத்துணர்ச்சியின்றி காணப்படும். இதற்கு காரணம் அலுவலகத்தில் உள்ள அதிக வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தால் பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆண்களை விட பெண்கள் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நாள் முழுவதும் எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும், மாலையில் வீட்டிற்கு வந்ததும் தங்கள் அழகைப் பாதுகாக்க சில பராமரிப்புக்களை மேற்கொள்ள முயற்சிப்பார்கள். நீங்களும் அப்படிப்பட்டவரா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இந்த கட்டுரையில் அழகு நிலையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலேயே எளிய முறையில் எப்படி சரும பொலிவை அதிகரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் செய்தால், சரும பொலிவு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மசாஜ் அழுத்தம் நிறைந்து சோர்வுடன் காணப்படும் சருமத்தை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு, ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்யும் போது முகச் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ஸ்கரப் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஸ்கரப் செய்ய வேண்டியது அவசியம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீக்கப்படும். ஆகவே உப்பு அல்லது சர்க்கரையை நீரில் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து முகத்தைக் கழுவுங்கள்.

ஃபேஸ் மாஸ்க் ஸ்கரப் செய்தால் மட்டும் போது, அதனைத் தொடர்ந்து சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். அதுவும் வீட்டில் கடலை மாவு, பால், மஞ்சள் தூள் போன்றவற்றைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடுவதால், சரும பொலிவு மேன்மேலும் அதிகரித்து காணப்படும்.

டோனர் சோர்ந்து காணப்படும் முகத்தை பொலிவாக்க மற்றொரு சிறப்பான வழி டோனர் பயன்படுத்துவது. அதுவும் முகத்தில் இருக்கும் மேக்கப்பை நீக்கிய பின், டோனர் போன்று செயல்படும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் ரோஸ் வாட்டரை நனைத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியைத் துடைத்து, 1 மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

ஐஸ் கட்டிகள் 2-3 ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் போட்டு கட்டி, பின் அதைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் பொலிவிழந்து காணப்படும் முகத்தை பிரகாசமாக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் சருமத்தைக் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காட்டும். அதற்கு சிறிது வெள்ளரிக்காயை அரைத்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஆவிப் பிடிப்பது ஆவி பிடிப்பதால் சருமத்துளைகள் திறந்து, அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும். ஆகவே இரவில் படுக்கும் முன் 5-10 நிமிடம் சுடுநீரில் ஆவி பிடித்து, துணியால் நன்கு துடையுங்கள். அதைத் தொடர்ந்து தவறாமல் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இதனால் முகம் பொலிவோடு இருக்கும்.

fair skin 11 1512995758

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button