30.8 C
Chennai
Thursday, May 30, 2024
14 1513250641 14
சரும பராமரிப்பு

வயதான தோற்றத்தை மாற்றியமைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும்.

உங்களது அழகை குறைத்துக் காட்டும் இந்த முக சுருக்கங்களை நீங்கள் எளிமையாக இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி போக்கலாம். சில இயற்கை பொருட்களை ஒன்றாக கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். இந்த பகுதியில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்..!

நல்லெண்ணெய்
நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம் மாறும்.

ஜூஸ் குடியுங்கள் வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸ் அல்லது கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். உங்களது ஆரோக்கியமும் இதனால் மேம்படும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

வெந்தயக்கீரை வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை நீங்கள் மறக்காமல் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ’ இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

சந்தனம் சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.

கடலை மாவு சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும்.

பப்பாளி பழம் பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். இதனால் சரும நிறம் கூடுவதோடு, சருமம் ஈர்ப்பதமாகவும் சுருக்கங்கள் இன்றியும் இருக்கும்.

தக்காளி அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும். உங்களது சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பாலேடு பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.

எலுமிச்சை தோல் எலுமிச்சையின் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். இது உங்களது இளமையை கெடுக்கும் சுருக்கங்களை போக்கும்.

பாதாம் தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

தேங்காய் எண்ணெய் முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பாசிப்பயறு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தயிர் சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டால், தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

ஃபேஸ் பேக் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

ஃபேஸ் பேக் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.14 1513250641 14

Related posts

கொரிய அழகிகளின் இந்த ஃபேஸ்பேக்குகளை நீங்க யூஸ் பண்ணா… ஜொலிக்கும் சருமத்தை பெறலாமாம்!

nathan

வேக்சிங் செய்வது எப்படி?

nathan

முகத்துக்கு சூப்பர் டிப்ஸ் ! !

nathan

உங்கள் மீது வீசும் வியர்வை நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்க சருமத்தை பாதுகாத்து ஜொலிக்க வைக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?

nathan

அழகை அதிகரிக்க ஓட்ஸை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்ய!…

nathan

சருமத்துக்கு பொருத்தமான க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan

5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா?

nathan