மருத்துவ குறிப்பு

உங்க உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைத்தால் என்னாகும் தெரியுமா! மருத்துவர் கூறும் தகவல்கள்..

இன்றைக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு எல்லாருக்கும் இருக்கிறது. அதீத விழிப்புணர்வினாலோ என்னவோ கொலஸ்ட்ரால் என்ற பெயரைக் கேட்டாலே பயந்து ஓடுகிறார்கள். எடையை குறைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அநியாயத்திற்கு கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுப் பொருட்களை தவிர்த்து வருகிறார்கள்.

ஆனால் கொலஸ்ட்ரால் குறைந்திருப்பது கூட குறிப்பிட்ட அளவை விட அதிகமாக குறைவது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கானது தான் தெரியுமா? இதனை Hypolipidemia என்று அழைக்கிறார்கள். இதிலேயே ப்ரைமரி மற்றும் செக்கண்டரி என்று இரண்டு வகைகள் இருக்கின்றன.அவை உண்டாவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டாட்டின் :
இது ஒரு மருந்து இது மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது பயன்படுத்தப்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறவர்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது.குறிப்பாக உங்களின் தசைகளை சிதைக்கும்.அதோடு கொலஸ்ட்ரால் உற்பத்திக்கு காரணமான என்சைம் உற்பத்தியை தவிர்க்கிறது.

ஹைப்பர் தைராய்டு :
தொண்டைப் பகுதியில் இருக்கக்கூடிய தைராய்டு சுரப்பி நம் உடலில் இருக்கக்கூடிய ஹார்மோன் உற்பத்திகளுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

இந்நிலையில் சில உடலியல் மாற்றங்களால் தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தாலும் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் குறைந்திடும். அதனால் தான் உடல் எடை குறைவது ஹைப்பர் தைராய்டுக்கான ஓர் அறிகுறியாக இருக்கிறது.

அட்ரீனல் :
அட்ரீனால் சுரப்பியில் நம் உடலுக்குத் தேவையான ஸ்டிராய்டு ஹார்மோன் கிடைக்காது.இதனால் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு குறையும். அதன் அளவு உடலில் குறையும் போது அதிகப்படியான தேவை உண்டாகும்.

இவை தொடரும் பட்சத்தில் கடுமையான வயிற்று வலி,வாந்தி,தசை வலி,மன அழுத்தம்,குறைந்த ரத்த அழுத்தம்,கிட்னி ஃபெயிலியர்,உடல் எடை குறைவு ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.

 

 கல்லீரல் பிரச்சனைகள் :
உடலில் கொலஸ்ட்ரால் குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது இந்த கல்லீரல் பிரச்சனை. நம் உடலில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் அளவை கண்காணிக்கூடியது கல்லீரல் தான். அதனால் அவற்றில் ஏதேனும் பாதிப்பு உண்டாகும் போது சட்டென கொலஸ்ட்ரால் அளவில் மாற்றங்கள் நிகழும்.

சத்துக்குறைபாடு :
இது பெரும்பாலனோருக்கு தெரிந்திருக்கும்.உடலுக்கு போதுமான அளவு சத்துக்கள் கிடைக்கவில்லை எனில் உடல் எடை கணிசமாக குறைந்திடும்.சரியான சரிவிகித உணவு சாப்பிடுவதில்லை என்பதால் உடலுக்குத் தேவையான நியூட்ரியன்ட்கள்,மினரல்ஸ் மற்றும் விட்டமின்ஸ் கிடைக்காது.

உடலுக்குத் தேவையான சத்துக்களுக்கும், கொலஸ்ட்ரால் உற்பத்தி செய்வதை தடுத்திடும்.

 

 மால் அப்சார்ப்ஷன் :
இண்டஸ்டீன்களில் மால் அப்சார்ப்ஷன் பிரச்சனை இருப்பின் அவை கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைக்கும்,இவை குறிப்பிட்ட அளவை தாண்டி குறையும் போது தான் நமக்கு வெளியவே தெரியவருவதால் இந்தப் பிரச்சனை அறிவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

மரபணு குறைபாடு :
abetalipoproteinemia .இது ஒரு வகையான மரபணு குறைபாடு. இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவில் கடுமையான மாற்றங்கள் தெரியும்.

இந்த பாதிப்பு ஜெவிஷ் மக்களிடையே தான் அதிகப்படியாக பார்க்கப்படுகிறது. இதே போல hypobetalipoproteinemia என்ற ஒரு வகை மரபணு குறைபாடு பாதிக்கப்பட்டால் கூட உடலில் கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக குறைந்திடும்.

மக்னீசியம் :
நம் உடலுக்கு மிகவும் அவசியமான நியூட்ரிசியன்களில் மக்னீசியமும் ஒன்று. இவை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மில்லி கிராம் எடுத்தாலே போதுமானது. அளவுக்கு மீறி எடுத்தால் அவை தீங்கினை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில் மக்னீசியம் எடுத்துக் கொள்வதை சுத்தமாக தவிர்த்தால் உங்களின் கொலஸ்ட்ரால் அளவில் கடுமையான மாற்றங்கள் இருக்கும்.

உணவு :
இவை எல்லாவற்றையும் விட நீங்கள் தினமும் சாப்பிடுகிற உணவு முக்கிய காரணியாக இருக்கிறது. உடல் எடையை குறைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உடலில் கொலஸ்ட்ராலை குறைக்கூடிய அல்லது கொலஸ்ராலே இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்து வருவதும் ஆபத்தானது.

நம் உடலில் சீரான இயக்கத்திற்கு உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ரால் மிகவும் அவசியமாகும்.7 11 1515645126

Related Articles

Back to top button