முகப் பராமரிப்பு

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் வழிகள்! சூப்பர் டிப்ஸ்……

பெண்கள் எப்போதுமே அழகாகவும், வெள்ளையாகவும் இருக்க விரும்புவார்கள். ஆனால் சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். உங்களுக்கு இப்படி உதட்டின் மேலே கருப்பாக இருப்பதைப் போக்க வேண்டுமா? அப்படியானால் நம் வீட்டிலேயே அதற்கான சில எளிய தீர்வுகள் கிடைக்கும். அதற்கு நம் வீட்டின் சமையலறை மற்றும் ஃப்ரிட்ஜில் இருக்கும் பொருட்களே போதுமானது. இப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கை வழியில் உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப் போக்கினால், எவ்வித பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

இக்கட்டுரையில் உதட்டிற்கு மேலே கருப்பாக இருப்பதைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

வழி #1 ஒரு எலுமிச்சை துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எலுமிச்சை துண்டால் சர்க்கரையைத் தொட்டு, உதட்டின் மேற்பகுதியில் சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். 3-5 நிமிடம் செய்வது மிகவும் சிறந்தது. இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமையாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம்.

வழி #2 ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால், கருமை நீங்கிவிடும்.

வழி #3 ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை இரவில் தூங்கும் முன் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், உதட்டிற்கு மேலே கருமையாக இருப்பதைப் போக்கிவிடலாம்.

வழி #4 ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை மேல் உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும். இதற்கு கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, வெள்ளையாவதற்கு உதவும்.

வழி #5 இது மிகவும் எளிமையான வழி. இதற்கு நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ் போதுமானது. தினமும் டூத் பிரஷ் கொண்டு கருமையாக இருக்கும் உதட்டிற்கு மேலே 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தினமும் இப்படி செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.

வழி #6 ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டையின் உதவியால் உதட்டின் மேற்பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வருவதன் மூலம், சீக்கிரம் கருப்பாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம். இதற்கு உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் தான் காரணம்.

வழி #7 சிறிது ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை உதட்டின் மேலே தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேலே இருக்கும் கருமை போய்விடும்.

வழி #8 ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, கிளிசரினில் நனைத்து, உதட்டிற்கு மேல் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் செய்து வந்தால், அசிங்கமாக கருப்பாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம். வேண்டுமானால் இந்த வழியை முயற்சித்துப் பாருங்கள்.

வழி #9 பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சாற்றினை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி இரவில் படுக்கும் முன் உதட்டின் மேலே தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால், கருமை நீங்கி, உதட்டின் மேல் பகுதி வெள்ளையாகும்.

வழி #10 ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு பேஸ்ட் செய்து, உதட்டின் மேல் பகுதியில் மட்டுமின்றி, முகம் முழுவதும் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் முகத்தில் கருமையாக இருக்கும் பகுதி வெள்ளையாகும்.

8 glycerine 24 1450955498 1518267367

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button