ஆரோக்கிய உணவு

நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணம்… நீங்களும் இதை சாப்பிடுங்க நோய் இல்லாமல் வாழலாம் சூப்பர் டிப்ஸ்..!!

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தாமல் உணவுகள் சமைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் வெங்காயத்தாளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் இதுதான் காரணம்.வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, விட்டமின் ஏ, கே மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.இது தவிர, காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாள் க்யூயர்சிடின் போன்ற பிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக இருக்கின்றது.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வந்தால், மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.

வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.வெங்காயத்தாளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் டி.என் ஏ பாதிப்படையாமல் இருக்க உதவுகிறது. புதிய செல்வளர்ச்சியை தூண்டுகிறது. ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைப்பதால் இதய நோய்கள் வராமல் காத்திட முடியும்.

சாதரணமாக பருவ காலங்களில் உருவாகும் நோய்களை வராமல் பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. குறிப்பாக நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது.Spring onions yaalaruvi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button