மருத்துவ குறிப்பு

உங்க காதினுள் பூச்சி சென்றுவிட்டால் என்ன செய்யவேண்டும்?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும்.

அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும்.

அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

திடீரென்று குழந்தைகள் காதைப் பிடித்துக் கொண்டு சத்தமாக அழுதால், அது காது நோயாக இருக்கும். காது நோ வயிற்று லியைவிட அதிக வேதனையைக் கொடுக்கும். காதுநோய் பெரும்பாலும், குழந்தைகளுக்கு மூக்கு தொண்டை நோய்னாள் ஏற்படும்.

இதிலிருநது நிவாரணம் பெற உடனடியாக சளினிவாரண மருந்து கொடுக்க வேண்டும். மூக்கு தொண்டை போன்ற பகுதிகளில் விக்ஸ் தடவலாம். மருத்துவர் ஆலோசனையின் பேரில்,காதுக்குச் சொட்டு மருந்தும் உபயோகிக்கலாம்.

ஆனால், எக்காரணம் கொண்டும், பஞ்சு கொண்டோ துணியைக் கொண்டோ, குசசியைக் கொண்டோ, காதினுள் சுத்தம் செய்யக் கூடாது. அபடிச் செய்தால், வெளிக்காதுப் பாதை புண்ணாகி,அ திக வலி கொடுக்கும். உடனேயே வலி ஏற்படுததும காதை கீழ் நோக்கிப் படும்படியாக குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும்.

சுடு தன்ணீர்ப் பையை சுத்தமான துணிகொன்டு நன்றாக மூடி காதின் அடியில் வைக்க வேண்டும். மிதமான சூடு ஒத்தடம் ஒரு நல்ல விலி நிவாரணி ஆகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.1 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button