ஆரோக்கிய உணவு

அருமையான முட்டை வறுவல்

சாம்பார் சாதம், தயிர் சாதம், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை வறுவல். இதன் செய்முறையை பார்க்கலாம்.

சாதத்திற்கு அருமையான முட்டை வறுவல்
தேவையான பொருட்கள் :

முட்டை – 4
வெங்காயம் – 2 பெரியது
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறிய துண்டு
தக்காளி பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்
முட்டை மசாலா பவுடர் – 2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகு தூள் – 1 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முட்டையை வேகவைத்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி பேஸ்ட் சேர்க்கவும்.

அடுத்து அதில் முட்டை மசாலா, [பாட்டி மசாலா] மிளகு தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் பொடி மற்றும் [பாட்டி மசாலா] கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.

அடுத்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து முட்டையை சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேக விடவும்.

தண்ணீர் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான முட்டை வறுவல் ரெடி.201802271211325122 Egg Roast SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button