முகப் பராமரிப்பு

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவலாம் என்று தெரியுமா?

ஒரு நாளைக்கு இவ்வளவு முறை தான் முகம் கழுவ வேண்டும் என்ற வரைமுறையை கடைபிடிப்பது அவசியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிலர் காலையில் ஒரு முறை குளிப்பது; மாலையில் ஒருமுறை முகம் கழுவுதல்; அதுவே போதும் என்று விட்டுவிடுவார்கள். ஆனால் சிலரோ ஓயாமல் முகத்தைக் கழுவிக் கொண்டே இருப்பார்கள். இந்த இரண்டுமே தவறு தான்.

ஒரு நாளைக்கு இவ்வளவு முறை தான் முகம் கழுவ வேண்டும் என்ற வரைமுறையை கடைபிடிப்பது அவசியம். ஏனென்றால் முகம் கழுவாமலேயே இருந்தால் தூசுக்கள் படிந்து, முகப்பரு, கரும்புள்ளிகள் என சருமப் பிரச்சினைகள் உண்டாகும்.

அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவினால் சருமம் வறட்சியடைந்து விடும். அதனால் முகம் கழுவுவதில் ஒரு வரைமுறையை பின்பற்றுவது அவசியம்.

வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 4 முறை முகத்தைக் கழுவுவது தவறான ஒன்று. இத்தகைய சருமத்தினர் பகலில் ஒரு நாளைக்கு ஒருமுறை தான் முகத்தைக் கழுவ வேண்டும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 முறை முகத்தைக் கழுவுவதன் மூலம் முகத்தில் எண்ணெய் வடிவதை தவிர்க்கலாம்.

ஒருவேளை முகப்பருக்கள் அதிகம் இருந்தால், ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறை முகத்தைக் கழுவ வேண்டும். அதுவும் சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் வெறும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு தான், எந்த வேலையையும் செய்வோம். வேண்டுமானால் இந்நேரத்தில் முகத்தைக் கழுவும் போது மென்மையான சோப்பைப் பயன்படுத்திக் கழுவலாம்.

இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மதிய வேளையில் கட்டாயம் முகத்தைக் கழுவ வேண்டும். அதிலும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும்.

இல்லையெனில், குளிர்ந்த நீரில் மட்டும் முகத்தைக் கழுவலாம். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேற்றப்படும்.

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.

கோடையில் மாலை வேளையில் முகத்தைக் கழுவுவதுடன், பழங்கள் அல்லது காய்கறிகளால் ஆன பேஸ் பேக் போடுவது, எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும் பேஸ் வாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், வெதுவெதுப்பான நீரில் பால் சேர்க்கப்பட்ட பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுவது நல்லது.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்……20180227 194551 1024x630

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button