முகப் பராமரிப்பு

பேரழகியா மாறணுமா?…அப்ப இத மட்டும் வீட்லயே முயன்று பாருங்கள்…

ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணம் தண்ணீராய் செலவழிகிறதா? ஆம் என்று பதில் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று இந்த பதிவில், வீட்டில் இருந்தபடி சில அழகு சிகிச்சை செய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்களுக்கு சென்று இனி பெருமளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை. இந்த சிகிச்சைகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சந்தையில் விற்கும் சில பொருட்களை வாங்கி வந்து உங்கள் வீட்டிலேயே இந்த சிகிச்சை முறைகளை செய்யலாம். பெடிக்யூர் முதல் எண்ணெய் சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சை முறைகளை இன்று பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்து கொள்கின்றனர்.

அழகு சிகிச்சை முறைகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஷியல் :

ஏதாவது ஒரு முக்கியமான நிகழ்வுக்கு செல்வதற்கு முன் அழகு நிலையம் சென்று பேஷியல் செய்து கொள்ளும் பழக்கம் சில நாட்கள் முன்பு வரை அதிகமாக இருந்து வந்தது. ஆனால் இன்று ஒப்பனை பொருட்கள் அல்லது அழகு சார்ந்த பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சென்று பேஷியல் தொடர்பான மாஸ்குகளை வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலேயே அழகு நிலையங்கள் தரும் பொலிவை விட அதிகம் பெறலாம். இப்படி சந்தையில் வாங்கும் மாஸ்குகள் விலை அழகு நிலையங்களுக்கு கொடுக்கும் விலையை விட குறைவானது.

மெனிக்யூர் :
நகங்களுக்கும் கைகளுக்கும் ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருப்பது மெனிக்யூர் ஆகும். இதற்கான செலவு அழகு நிலையங்களில் மிகவும் அதிகம். இந்த மெனிக்யுரை வீட்டில் செய்ய முயற்சிக்கலாம். எளிதாகவும் செய்யலாம். கைகளுக்கு தொடர்ந்து மெனிக்யூர் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது , நகங்களிலும் கைகளிலும் அழுக்குகள் மற்றும் இறந்த அணுக்கள் படியாமல் இருக்க உதவுகிறது.

பெடிக்யூர் :
வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய மற்றொரு சிகிச்சை பெடிக்யூர். வீட்டில் இருந்தபடி இந்த சிகிச்சையை செய்து கொள்வதற்கு தேவையான பொருட்கள் வீட்டிலேயே உண்டு. ஆகவே, வீட்டில் இருதே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களில் படியும் அழுக்குகளை மற்றும் இறந்த அணுக்களை நீக்கலாம். அழகு நிலையத்தில் ஆகும் இதற்கான செலவையும் குறைக்கலாம்.

தலைமுடிக்கான எண்ணெய் சிகிச்சை :
வெதுவெதுப்பான எண்ணெய் சிகிச்சை முறை, உங்கள் கூந்தலில் பல விதமான நன்மைகளை செய்கிறது. வேர்களில் இருந்து உங்கள் கூந்தலை இது உறுதிபடுத்துகிறது. கூந்தலுக்கு நல்ல ஊட்டச்சத்தை தருகிறது. இதே சிகிச்சை முறையை ஸ்பாவில் செய்வது மிகவும் விலை அதிகமான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையை வீட்டிலேயே செய்து கொள்வதால், உங்கள் பணமும் மிச்சமாகிறது.

எச்போலியான்ட் :
அழகு நிலையங்களில் பொதுவாக சருமத்தை புத்துணர்ச்சி பெற செய்ய ஸ்க்ரப் மற்றும் பீல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதே சிகிச்சைகளை வீட்டில் இருந்தும் செய்து கொள்ளலாம். இயற்கையான ஸ்க்ரப்களை வீட்டிலேயே நாமாகவே தயாரிக்கலாம்.அல்லது கடையில் வாங்கிக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யலாம்.

ப்ளோ அவுட் :
வீட்டில் இருந்தபடி செய்யும் மற்றொரு எளிய சிகிச்சை முறை ப்ளோ அவுட். இதனை வீட்டிலேயே வசதியாக செய்து கொள்ளலாம். சரியான ஹேர் பிரஷ் , மற்றும் டிரையர் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ப்ளோ அவுட் செய்யலாம். இதனால் அழகான ஸ்டைலான அடர்த்தியான முடியை பெறலாம்.

வாக்சிங் :
வாக்சிங் செய்வதற்காக பல பெண்கள் அழகு நிலையங்கள் நோக்கி செல்வர். இதனால் சிலருக்கு சருமத்தில் அழற்சி கூட உண்டாகும். இந்த வாக்சிங் செய்வதற்காக ஒரு தொழில் முறை நிபுணர் அவசியமில்லை. இந்த அழகு சிகிச்சை முறையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வாக்சிங் செய்து கொள்ள பயன்படும் பொருளை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம் அல்லது அவற்றையும் வாக்சிங் ஸ்ட்ரிப்களையும் கடையில் வாங்கி நீங்களே பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையற்ற முடிகளை நீங்களே நீக்கி விடலாம்.

ஹேர் டை :
முடிக்கு டை பூசுவதற்காக அழகு நிலையங்கள் செல்வது மிகவும் விலை மதிப்பானது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக, இதனை வீட்டிலேயே செய்து கொள்ளும் வசதி உண்டு. இன்று பல பெண்கள் அவர்களின் தலை முடிக்கு வீட்டிலேயே டை பூசி நல்ல தீர்வை பெறுகின்றனர்.

நீராவி (ஸ்டீம்) பேஷியல் :
சரும துளைகள் பெரிதாக இருப்பவர்களுக்கு நீராவி பேஷியல் நல்ல தீர்வை தருகிறது. இந்த சிகிச்சைக்காக பல பெண்கள் ஸ்பாவை தேடி செல்கின்றனர். ஆனால் இதனை எளிதாக வீட்டில் செய்யலாம். அழகான தெளிவான களங்கமற்ற சருமத்தை எளிதாக பெறுவதுடன் உங்கள் பணமும் உங்கள் பையை விட்டு செல்வதில்லை.ci 1520860278

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button