ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால்…..

மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 49 வயதுவரை உள்ள இந்திய தாய்மார்களில் 50 சதவீதம் பேர் ரத்தச்சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. உடலில் உள்ள ரத்த நாளத்தின் வேலை என்பது ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும். உடலுக்கு போதிய இரும்புச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதபோது ரத்தச் சோகை ஏற்படுகிறது.201803200830222557 1 pregnantanimiya. L styvpf

இதன்காரணமாக ரத்த நாளங்கள் உடல் முழுவதும் போதிய அளவு ஆக்சிஜனை எடுத்து செல்ல முடியாமல் போகும். இதனால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படும். கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள். இதனால் கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த தாயின் நலனை சார்ந்தே உள்ளது.

பெண்களுக்கு சராசரியாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவைவிட 22 சதவீத பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 11 வயதுக்கு உட்பட்ட 58 சதவீத இந்திய குழந்தைகள் ரத்தச் சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட இந்தியப் பெண்கள் 53 சதவீதம் பேர் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தலைமுறை குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் அவர்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு மணி நேரம் விளையாட முடிகிறது என்பதைக் கண்காணிக்க முடியும். அல்லது விளையாடி கொண்டிருக்கும்போதே குழந்தைகள் சோர்வாகி விடுகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வீடியோ கேம், கைபேசிகளுடன் பொழுதை கழிக்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் கண்டு பிடிப்பதே கஷ்டமாக உள்ளது.

ரத்தச்சோகை குறைபாடுடைய குழந்தைகளுக்கு கவனச் சிதறல், ஞாபக ஆற்றல் குறைவாக இருக்கும். வீட்டுப்பாடம், ஓவியம் வரைதல் போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கவனம் செலுத்தி செய்யும் விஷயங்களை, அவர்களால் செய்ய முடியாது. குறிப்பாக 8 முதல் 12 வயதுள்ள பெண் குழந்தைகளுக்குத்தான் அதிக அளவு ரத்தச் சோகை பாதிப்பு ஏற்படுகிறது.

பொதுவாக பெண் குழந்தை பருவம் அடையும்போது இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக இரும்புச் சத்துள்ள கீரை, பழங்கள், பேரீச்சை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். சரியான மருத்துவ வழிமுறைகளைப்பின்பற்றி, ரத்தச்சோகையின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button