ஆரோக்கிய உணவு

படிங்க இது தெரிந்தால் இனிமேல் வெங்காயத்தோலை குப்பையில் போடமாட்டீர்கள்..!

நீங்கள் தேவையில்லை என்று குப்பைத்தொட்டியில் போடும் வெங்காய தோல் பல அற்புதங்களை செய்யக்கூடியது. வெங்காயத்தின் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும், அது உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது. இங்கே வெங்காயத்தோலை எப்படி பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.onion bokra

அழற்சிக்கு எதிரானது
வெங்காயத்தோலை நீரில் போட்டு வைக்கவேண்டும். இந்த நீரானது ஒரே இரவில் வெங்காயத்தோலின் சத்துக்களை உறிஞ்சிவிடும். இந்த நீரை நீங்கள் தடிப்புகள், ஒவ்வாமை அல்லது தோல் வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

ஈக்கள் மற்றும் பூச்சிகளை வராது:
ஈக்கள் மற்றும் கொசுக்கள் பல நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளன. இவற்றை வீட்டினுள் நுழையவிடாமல் தடுக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெங்காய தாள்களை போட்டு, ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் அருகில் வைத்து விட வேண்டும். இதன் வாசனை ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளை வீட்டிற்குள் நுழையவிடாது.

ஹேர் கண்டிஸ்னர்
தலை முடியை நன்றாக அலசிய பின்னர் வெங்காய தோலால் இரவே ஊற வைத்த தண்ணீரைக்கொண்டு முடியை அலசினால், முடி மென்மையானதாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கொழுப்பை குறைக்கிறது
கொதிக்கும் நீரில் வெங்காய தோல்களை போட்டு அடிக்கடி பருகி வந்தால், எல்.டி.எல் கொழுப்பு குறைகிறது. இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் இதனுடன் தேன் கலந்து பருகலாம்.

இரவில் பருகலாம்
இந்த வெங்காய டீயை இரவு படுக்கைக்கு போவதற்கு முன்னர் பருகலாம். இதில் அடங்கியுள்ள நார்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கார்டிவாஸ்குலர் இருதய நோய் வரமால் தடுக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button