அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கிர்ணி பழ பேஸ்பேக் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது

கிர்ணி பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.

தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிர்ணி பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தோலின் மீது தடவினால் தோல் மிருதுவாகும்.201804071027356264 kirni fruit face pack SECVPF

கிர்ணி பழ விதையைக் காய வைத்து பவுடராக்கி 100 கிராம், ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கூந்தல் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். கிர்ணி பழ விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிர்ணி பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

இரண்டு தேக்கரண்டி வெள்ளரி ஜூஸூடன், இரண்டு தேக்கரண்டி கிர்ணி பழ விழுதைச் சேர்த்து, 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, வெளியில் போகும் போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும், இதற்கு கிர்ணி பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து விழுதாக அரைத்துத் தேய்த்துக் குளித்து வர முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

வயோதிகத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். இதற்கு பால் பவுடர், கிர்ணி பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.
கடுகு எண்ணெய்யுடன், கிர்ணி பழ விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பஞ்சு போல் மிருதுவாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button