ஆரோக்கிய உணவு

ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் நாம் நினைத்தது பார்க்காத அளவுக்கு ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது.

முருங்கை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அதிக மருத்துவக் குணங்கள் வாய்ந்ததாக இருக்கிறது.

முருங்கை காயில் இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

முருங்கை காய்

முருங்கைக் காயுடன் நெய் மற்றும் புளி சேர்த்து சமைத்து சாப்பிடுவதால், மிகுந்த சுவையுடனும், உடலுக்கு நல்ல வலிமையையும் தருகின்றது. அதிலும் பிஞ்சு முருங்கைக்காய் ஒரு பத்திய உணவாக பயன்படுகிறது.

அன்றாட வாழ்வில் நம் உணவில் முருங்கைக் காயை வேக வைத்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களில் இருந்து விடுபடலாம்.

முருங்கைக் காயை மற்றும் அதன் விதைகளை தினமும் சூப் செய்து சாப்பிட்டால், மூட்டு வலியைப் போக்கி, மூளைக்கு நல்ல பலத்தை தருகின்றது.

முருங்கை இலை

முருங்கை இலையில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் இருப்பதால், இதை நறுக்கி, பின் மிளகு சேர்த்து ரசம் வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், உடம்பின் வலிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால், ரத்தம் அதிகரித்து, ரத்த சோகை வராமல் தடுக்கும். பற்கள் வலுவாகி, தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் எலும்புகள் வலிமையாக இருக்கும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்துகிறது.

முருங்கைப் பூ

முருங்கை பூவை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால், வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் சூடு, மந்தம், கண்நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக் கூறலாம்.

முருங்கைப் பட்டை

முருங்கைப் பட்டையில் இரும்பு சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே முருங்கைப் பட்டையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து வீக்கங்கள் மற்றும் வாயு தங்கிய இடங்களில் போட்டால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் இது உணவில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு பயனுள்ள மருந்தாகவும் பயன்படுகிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்1 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button