முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்..முகத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள்..

முகத் தேமல் மறைய :

பூவரசன் விதையைச் சுத்தம் செய்து கழுவத்தில் எலுமிச்சை விட்டு அரைத்து தேமலின் மீது தடவி ஊற வைத்து வெந்நீரில் கழுவி வர தேமல் மறையும். இதே போல துவர்பாக்கு, வில்வ இலை, அவுரி சமூலம், வேப்பம்பட்டை, நில வேம்பு, கஸ்தூரி மஞ்சள் இவற்றைத் தனித் தனியே இடித்து சலித்து, கலந்து வைத்துக் கொண்டு சிறிது பொடியை நீரில் குலைத்து தேமல் உள்ள இடங்களில் நன்றாகப் பூச ஊற வைத்துக் குளிக்க தேமல் மறையும்.

முகத்தில் தழும்புகள் நீங்க :

அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

முகத்தில் ஏற்படும் சொறி நீங்க:

சில ஆண்களுக்கு கண்ட, கண்ட சலூன்களில் சுத்தம் செய்யாத கத்தியால் முகச் சவரம் செய்து கொள்வதால் முகத்தில் சலூன் சொறி ஏற்படுவதுண்டு. இதற்கு ஒரு வெற்றிலையை நன்கு அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து சொறியின் மீது தடவி வர சில நாள்களில் சொறி குணமாகும்.

முகம் பளபளக்க :

புளிப்பு இல்லாத தயிருடன் சிறிது மஞ்சள் பொடி கலந்து தடவி வர முகம் வெண்மையாக, மென்மையாக பளபளக்கும். ஓட்ஸ் தானியத்தை மைய அரைத்து தயிர் கலந்து ஊற வைத்து கழுவி வர முகம் அழகும் நிறமும் பெறும்.

சில பெண்களுக்கு பொட்டு வைத்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறதா இதோ அதற்கும் ஒரு கை வைத்தியம் :

வில்வ மரக் கட்டையை சந்தனக் கல்லில் இழைத்து பொட்டு வைக்கும் இடத்தில் தடவி வர நல்ல குணம் காணலாம். அதுபோல வேப்ப இலைகளையும் கூட அரைத்துப் பூசலாம்.

முகப் பருவுக்கு:

சிறிது கருஞ்சீரகத்தை அம்மியில் வைத்து சிறிது எருமைப் பால் விட்டரைத்து பருக்களின் மீது போடலாம். ஒருவேளை கைவசம் கருஞ்சீரகம் இல்லா விடில் நல் சீரகத்தையும் பயன்படுத்தி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவி வர பருக்கள் அனைத்தும் மறையும். அதுபோல ஜாதிக்காயை சந்தனக் கல்லில் உரைத்து தினமும் பருக்கள் மீது இரவு பூசி வர பருக்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல மறையும்.

இதே போல, துத்தி இலையையும் பூவையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து பருக்களின் மீது போட்டு வந்தாலும் பருக்கள் நன்கு ஆறிவிடும். சந்தனம், மிளகு, சாதிக்காய் இந்த மூன்றையும் அரைத்து பருக்களின் மீது தடவி வர பருக்கள் மறையும். இத்துடன் வெந்நீர் ஆவி பிடிப்பது மிக நல்லது.

முகம் பள பளக்க சில யோசனைகள் :

தினமும் காலையில் முகத்தில் சிறிது தேங்காய் எண்ணெய்யை தடவி 10 நிமிடம் கழித்து பயற்றமாவு கொண்டு முகம் கழுவி வர முகம் பளபளக்கும். அத்துடன் முகப்பருவும் வரவே வராது.

முகத்தில் வடுக்கள் நீங்க:

கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு, பாதாம் பருப்பு – நீரில் ஊற வைத்த பாதாம் பருப்பு மூன்று, தயிர் – 2 டீ ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன் இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி , தழும்புகள் நீங்கி முகம் அழகு பெரும்.

முகத்தில் காணப்படும் கரும் புள்ளிகள் அகல :

எலுமிச்சம் பழச்சாறு, கசகசாப் பொடி, தேங்காய்ப் பால் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து அவை காய்ந்த பின் பயத்தமாவு கொண்டு முகம் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிங்கு போல் மாறும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.AdobeStock 60049312

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button