ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா நீரிழிவு நோய்க்கு முடிவுக்கட்ட இந்த ஒரு பொருள் போதும்!

உண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் ஆகியவை நிறைய உள்ளதால் சுமார் 9௦௦௦ வருடங்களுக்கு மேலாக இதனை மக்கள் பயன்படுத்தி வரும் இயற்கை மருத்துவ குணம் மிக்க உணவு பொருள்.

இத்தனை வருடங்களுக்கு மேலாக இதனை பயன்படுத்தி வருவதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி காணலாம்.

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.

மற்ற எல்லா பருப்பு வகைகளைக் காட்டிலும் பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும்.

ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.

மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். இதய நோய் வருவதற்கு காரணமான லிப்போபுரதங்களின் அளவை குறைத்து பல இதய நோய்கள் வருவதை தடுக்கும் தன்மை கொண்டது.

இதில் உள்ள அமினோஅமிலங்கள் மற்றும் L-அர்ஜினைன் என்ற வேதிப்பொருள், இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது.

இது பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது. பிஸ்தா உட்கொள்ளுவதால் உடலில் கிளைசெமிக், இரத்த அழுத்தம், நோய் தொற்று மற்றும் பருமன் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்பது ஈரானியர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்பாகும்.

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது.

குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது.

இவை பெருங்குடல் புற்றுநோயை தடுக்கவும் மற்றும் ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ப்யூட்ரேட் போன்ற ஒரு சில பயனுள்ள சிறு-சங்கிலி கொழுப்பு அமிலங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக அறியப்படுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் B6-ம் இதற்கு பயன்படுகிறது. அது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

பிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது.

பிஸ்தா பருப்பு கொண்ட சிற்றுண்டிகளை மிக எளிதாக மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்க முடிவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு, தாய்மார்களுக்கு அளவிட முடியாத ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறதுpistachio

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button