தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா சீயக்காய் பொடியை எவ்வாறு வீட்டிலேயே தயாரிப்பது…!

சீயக்காய் பொடி கிருமிக் கொல்லியாகவும், புண்களை ஆற்றுவித்து, சீழ்பிடிக்காமல் வற்றச் செய்யும் மருத்துவக் குணமும் கொண்டதாகும். தலைமுதல் கால்வரை வரக்கூடிய சொறி, சிரங்கு, அடிபட்ட ரணங்களை “டெட்டால்” மூலம் கழுவுவதைப் போல் சீயக்காய்ப் பொடியை நீரில் கலந்து காய்ச்சி, அந்த கஷாயத்தால் கழுவலாம்.

செப்டிக் புண்களையும், சீழ் வடியும் ரணங்களையும், சீயக்காயினால் கழுவி வர அவை விரைந்து ஆறும். தலைமுடியில் அழுக்குப்படிந்து சிக்கு ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது தேய்த்து வெந்நீரில் குளிக்க சிக்குகள் விலகி முடி மென்மை பெறும். தலைமுதல் கால்வரை அழுக்குகளை நீக்கிக் சுத்தப்படுத்தும் சீயக்காய் இயற்கை தந்த இனிய ஷாம்பூ ஆகும்.

சீயக்காய் தயாரிக்கும் முறை:

நென்னாரி வேர் – 1 பிடி

சந்தன சக்கை – 1 பிடி

ரோஜா மொக்கு – 5 பிடி (உலர்ந்தது)

ஆவாரம்பூ – 5 பிடி(உலர்ந்தது)

பச்சை பயறு – 2 பிடி

வெந்தயம் – அரை பிடி

சீயக்காய் – 1 கிலோ

இவை யாவும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். இவற்றை ஒருநாள் வெய்யிலில் உலர்த்திப் பின் மிஷனில் அரைத்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தித் தினசரி குளிக்கும்போது பயன்படுத்தலாம்.

சீயக்காய், ஷாம்பூபோல் நுரை வரவேண்டும் என்றால், அதனுடன் பூவந்திக் கொட்டையின் தோலினை 2 பிடி உலர்த்தி சேர்த்து அரைத்தால் ஷாம்பூபோல் நுரை வரும். இதனை சீயக்காய் தூளுடன் சேர்த்தும் உபயோகப்படுத்தலாம்.201609211128319519 Shikakai Powder hair solving problem SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button