மருத்துவ குறிப்பு

நீங்கள் 40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க!

நம்மூரில் அடிக்கடி பிரபலமானது கிட்னி பீன்ஸ். சுவை நிறைந்த இதனை நாம் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். டார்க் சிகப்பு நிறத்தில் கிட்னி வடிவத்தில் இருப்பதினால் இதற்கு இந்தபெயர். இதில் அதிகப்படியான பொட்டாசியம்,மக்னீசியம்,இரும்புச்சத்து மற்றும் ப்ரோட்டீன் ஆகியவை நிரம்பியிருக்கிறது.

அசைவ உணவு சாப்பிடாதவர்கள் இந்த பீன்சை எடுத்துக் கொள்ளலாம். அதனால் உங்களுக்கு தேவையான ப்ரோட்டீன் கிடைத்திடும். இதனை ராஜ்மா என்றும் அழைப்பார்கள். இந்த ராஜ்மாவை பயன்படுத்தி வந்தால் உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

புற்றுநோய் :
இந்த ராஜ்மாவில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இவை ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு செல்களை பாதுகாத்திடும். செல்களில் இருக்கக்கூடிய மிட்டோச்சோன்றியாவை பாதுகாக்கும். அதோடு இதில் விட்டமின் கேவும் இருப்பதினால் புதுசெல்களில் உருவாவதில் இருக்கிற சிக்கல்களை தவிர்க்க உதவிடும்.

புற்றுநோய் தாக்கம் இருப்பவர்கள், இதனை ஆரம்ப நிலையிலிருந்தே உட்கொண்டு வந்தால் புற்றுநோய் அதிகம் பரவாமலும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

மூளை செயல்பாடுகள் :
நம்முடைய நரம்பு மண்டலங்களுக்கு குறிப்பாக மூளை செயல்பாடுகளுக்கு விட்டமின் கே அவசியம். ஸ்ஃபிங்கோ லிப்ட்ஸ் என்ற கெமிக்கல் மூளை செயல்பாடுகளுக்கும் நரம்புகளுக்கும் அவசியம். இது உருவாக வேண்டும் என்று சொன்னால் விட்டமின் கே தேவை அது ராஜ்மாவில் நிறைந்திருக்கிறது.

அதைத் தவிர மூளை செல்களுக்கு அத்தியாவசியமாக இருக்கிற தையமினும் ராஜ்மாவில் அதிகம் இருக்கின்றன. உங்கள் நினைவாற்றலை அதிகப்படுத்தும்.

சர்க்கரை :
இன்றைக்கு இருக்கிற பெரும்பாலனவர்களின் முதன்மையான பிரச்சனையாக இருப்பது சர்க்கரை தான். இதுல சுகர் இருக்கா? என்று கேட்டு சாப்பிடும் அளவிற்கு பயந்து போய் கிடக்கிறார்கள். ஆனால் அவை ஏற்படுத்துகிற தாக்கம் கொஞ்சம் நஞ்சமா என்ன? ராஜ்மாவில் கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. இவை உணவு சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.

செரிமானம் :
எது நன்றாக நடக்கிறதோ இல்லையோ செரிமானம் ஆவதில் ஏதேனும் தடங்கள் ஏற்பட்டது என்று சொன்னால் அது மொத்த உடலின் இயக்கத்தையே மாற்றிவிடும். வயிற்று வலியில் ஆரம்பித்து பல உபாதைகள் ஏற்படும். இதனை தவிர்க்க ராஜ்மா சாப்பிடலாம்.

இதிலிருக்கக்கூடிய ஃபைபர் பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்தும். இவை உணவு செரிமானத்திற்கு மிகவும் அவசியமாகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கோலன் கேன்சரிலிருந்து தப்பிக்கலாம்.

எனர்ஜி :
இதில் அதிகப்படியான இரும்புச் சத்து இருக்கிறது. இது உங்களுடைய எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும். அதோடு இதில் மக்னீசியமும் இருப்பதால் மனதளவில் சோர்வாக உணர்வது தவிர்க்கப்படும்.

அதைத் தவிர இது உங்கள் உடலில் இருக்கிற கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்படுத்த உதவிடும். மேலும் இதிலிருக்கிற ஃபோலேட் உடலில் ஹோமோசிஸ்டின் உற்பத்தியை கட்டுப்படுத்தும். இதனால் பக்கவாதம் பாதிப்பிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

சருமம் :
ராஜ்மாவில் ஜிங்க் இருக்கிறது. இதனை விட்டமின் பி6 என்றும் வழங்குவார்கள். இது திசுக்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் சருமம் மற்றும் தலைமுடியினை ஆரோக்கியமாக நீங்கள் பராமரிக்கலாம்.

வயதாவதால் ஏற்படுகிற சருமப் பிரச்சனைகளை தவிர்க்க ராஜ்மா உதவிடும்.

நகங்களுக்கு :
ராஜ்மாவில் அதிகப்படியான பயோடின் இருக்கிறது. இது நகங்களை ஆரோக்கியமாக வளர்க்க உதவிடுகிறது உடலில் பயோட்டின் குறைந்தால் தான். நகம் உடைவது, நகத்தில் வளர்ச்சியே இல்லாமல் இருப்பது ஆகியவை ஏற்படும். சிலருக்கு நகத்தின் நிறம் மாறும்.

வியர்வைச் சுரப்பி :
ராஜ்மாவில் அதிகப்படியான ஜிங்க் இருக்கிறது. இது நம் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதைத் தவிர சருமத்தில் இருக்கக்கூடிய செபாஸ்கஸ் சுரப்பி சீராக வேலை செய்யவும் ராஜ்மா உதவிடுகிறது. இந்த சுரப்பி தான் நம்முடைய வியர்வைச் சுரப்பியாகும். இந்த சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்று சொன்னால் பரு,கரும்புள்ளி,ஆகிய பாதிப்புகள் தோன்றிடும். சிலருக்கு வியர்க்காமல் அலர்ஜி கூட ஏற்படுவதுண்டு.

மேலும், இதிலிருக்கக்கூடிய ஃபோலிக் ஆசிட் புதிய சரும செல்களை உருவாக்கும். இதனால் சருமத்தில் ஏற்படுகிற பாதிப்புகளை விரைவிலேயே தீர்க்கலாம்.

மெனோபாஸ் :
மெனோபாஸ் காலத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய ஒஸ்டியோபொராசிஸ் பிரச்சனையை சமாளிக்க ராஜ்மா உதவிடும். பொதுவாக இந்தப் பிரச்சனை ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் உங்களுடைய எலும்புகள் எல்லாம் வலுவிழந்து விடும்.

ராஜ்மாவில் இருக்ககூடிய ஃபைபர், பொட்டாசியம்,லீன் ஃபைபர்,ஃபோலேட்,மக்னீசியம் மற்றும் ஜிங்க் ஆகியவை இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவிடுகிறது.

கெட்ட கொழுப்பு :
ராஜ்மாவில் ஃபைபர்ன்யா இருக்கிறது. இவை உற்பத்தி செய்கிற அமிலத்தினால் கல்லீரலில் கொழுப்பு படிவது தவிர்க்கப்படும்.மேலும் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்வதையும் இது தடுத்திடும்.

மேலும் இதில் இருக்கக்கூடிய நியூட்ரிஷியன்கள் உடலில் டிஎன்ஏ மற்றும் ஆர் என் ஏ செயல்பாடுகளை துரிதப்படுத்தும். இது இதயத்திற்கு மிகவும் நல்லது.

மைக்ரேன் தலைவலி :
ராஜ்மாவில் இருக்கக்கூடிய ஃபோலேட் சத்து உங்களுடைய நினைவுத் திறனை அதிகப்படுத்த உதவிடும்.இதில் இருக்கக்கூடிய மக்னீசியம் மைக்ரேன் தலைவலியை கட்டுப்படுத்தும்.

இதைத் தவிர ராஜ்மாவில் இருக்கக்கூடிய ஃபேலவான்ய்டினால் சருமம் பொலிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். சரும சுருக்கங்கள் சீக்கிரத்திலேயே ஏற்படாமல் தவிர்க்க ராஜ்மா தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.8 1526552631

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button