மருத்துவ குறிப்பு

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நிபா’ வைரஸ் நோயின் அறிகுறிகள் இவைகள் தான்!

நிபா’ வைரஸ் பாதிப்பானது முதன்முறையாக 1998ம் ஆண்டு மலேசியாவில் ஒரு கிராமத்தில் தோன்றியது. பிறகு அந்த கிராமத்தின் பெயரான ‘நிபா’ வை வைரஸுக்கு பெயராக வைத்துள்ளனர். அன்று முதல் அந்த தொற்று ‘நிபா’ வைரஸ் என்று பெயராகியுள்ளது. இந்த ‘நிபா’ வைரஸ் ஹெபினா வைரஸ் என்ற இனத்தில், பேரமிக்ஸோவிரிடே குடும்பத்தைச் சார்ந்தது

நிபா வைரஸ் வசிக்கும் காட்டு உயிரினங்கள் நகரத்திற்கு வரும் போது, அங்குள்ள மனிதர்களின் ஆடு, நாய், பூனை, குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு அவற்றின் கழிவுகளில் இருந்து இது பரவி இருக்கிறது. பின்னர் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவியது.

எப்படியெனில், மலேசியாவில் பன்றி பண்ணைகள் இருந்த பகுதியில் வவ்வால்கள் வந்ததால் முதலில் பன்றிகளுக்கு வைரஸ் பரவியது. பின்னர் இந்தப் பன்றிகளின் கழிவை நேரடியாக தொட்ட மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. பின்னர், வழிவழியாக மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளன.

இந்த வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறும்போது…!

கடுமையான தலைவலி, காய்ச்சல், மயக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்பட்டு மூளைக் காய்ச்சலாக தீவிரமடையும்.இந்த வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாகும் போது கோமா ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த வைரஸை குணப்படுத்த எந்த மருத்துவமும் தனியாக இல்லை. காய்ச்சலை கட்டுக்குள் வைப்பது போன்ற துணை சிகிச்சைகள் மூலமே வைரஸை கட்டுப்படுத்த முடியும். இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button