மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களுக்கு மருந்தாகும் மரிக்கொழுந்து…..!

மரிக்கொழுந்து மணம் தரக்கூடியது. மனதுக்கு இதம் தரவல்லது. தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. விட்டு விட்டு ஏற்படும் வலியை போக்கும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்றுவலி, தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.

மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்று வலி, தோல்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.செய்முறை: மரிக்கொழுந்து இலை பசை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், 100 மில்லி நீர்விட்டு சுமார் அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது தெளிந்ததும் வடிகட்டி குடித்துவர வயிற்று வலி சரியாகும். தோல்நோய் பிரச்னைகள் இருப்பவர்கள் இதை தினமும் எடுத்துவர பூஞ்சை காளான்களால் ஏற்படும் தொற்று சரியாகும். சொரியாசிஸ் பிரச்னை குணமாகும்.

மூட்டுவலி இருக்கும்போது மேல்பற்றாக போடுவதால் நல்ல பலன் கிடைக்கும். வீக்கம் வற்றும். வலி விலகும்.மரிக்கொழுந்து மனதுக்கு இதம் தருகிறது. உறக்கத்தை வரவழைக்கிறது. விட்டுவிட்டு வரும் வலிகளை போக்கும்.

வயிற்று கடுப்பை போக்கும் ஒன்றாக விளங்குகிறது. சிறுநீர் கடுப்பையும் தணிக்கிறது. கதம்பத்தில் கட்டி தலைக்கு சூடும் ஒன்றாக விளங்கும் மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுக்கும்போது தூக்கத்தை தூண்டக்கூடியதாக விளங்குகிறது.

மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடியின் நிறம் மாறும். மரிக்கொழுந்து அழகு சாதனங்கள், நறுமணபொருட்கள், புகையிலை மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகின்றது.

பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை வலியையும் போக்க கூடிய தன்மை உடையது. சொரியாசிஸ் நோய்க்கு மருந்தாகிறது. அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது.1527745210 1575

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button