அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

காலை 10 மணிவரையிலும் உள்ள இளம் வெயிலால் வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் உடலுக்கு நல்லது. அதனால் அப்போது வெளியில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படாது. நண்பகல் வெய்யில்தான் மேற்புறத்தோலை பதம் பார்க்கிறது. வெயிலில் வேலை செய்பவர்களாக இருந்தால் வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீனைக் காட்டிலும் SPH 30 அளவுள்ள சன் ப்ளாக் லோஷனை(Sunblock lotion) உபயோகிக்க வேண்டும்.

fac
சருமத்துக்கு தீங்கினை ஏற்படுத்தக்கூடிய சூரியக்கதிரானது தோலுக்கு அடிப்புறத்தில் இருக்கும் திசுக்களில் ஊடுருவாமல் சன்ப்ளாக்கில் உள்ள டைட்டானியம் டயாஃபைடு மற்றும் சின்க் ஆக்ஸைடு இரண்டும் முற்றிலும் தடுக்கிறது. 2 மணி நேரம் வரைதான் பாதுகாப்பு கொடுக்கும் என்பதால் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை சன் பிளாக்கை முகத்தைக் கழுவியபின் போட்டுக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே சன்பிளாக் போட்டுக் கொள்ளும்போதுதான் தோலின் அடிப்புறத்திலும் ஊடுருவி செட்டாகும். வீட்டிற்குள் இருப்பவர்களும் லேசாக போட்டுக் கொள்ளலாம்.

இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் தொடர்ந்து வெயில் காலம் முழுவதும் அப்படியே விட்டுவிட்டால், முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும். இதுவே மங்கு என்று சொல்லும் ஹைபர் பிக்மன்டேஷனில் கொண்டுவிடும் அபாயம் உண்டு. எனவே, கோடைக்காலம் முழுவதுமே வீட்டுக்கு வந்தபிறகு அந்தந்த நாளில் ஏற்படும் கருமையை போக்கிவிட வேண்டும். இதற்கு, காலமைன் லோஷனை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, 2 சொட்டு எலுமிச்சைசாறு, 2 சொட்டு தண்ணீர் விட்டு நன்றாக குழைத்து முகம், கை, கால்களில் தடவிக்கொண்டு உறங்கச் செல்லலாம். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் முதல்நாள் முகத்தில் ஏற்பட்ட கருமை நீங்கி, முகம் பளிச்சென்று ஆகிவிடும். இதை கோடைகாலம் முழுவதுமே செய்து வரவேண்டும். இவை அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button