ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

பெயர் விளக்கம்: பத்த கோணாசனம் என்றால் கட்டப்பட்ட கோண நிலை என்று பொருள்.

செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும், இரு முழங்கால்களையும் மடக்கி உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும்படி வைக்கவும். கைவிரல்களை ஒன்றாக சேர்த்து, ‘உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும்.201609290955512468 uterus menstrual problems adjusting baddha konasana SECVPF

இது பத்த கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்நிலையில் 5 முதல் 10 நிமிடம் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கூட ஆசனத்தில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம். வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த ஆசன பயிற்சியை செய்யலாம்.

பயிற்சிக்குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குளிக்ககூடாது.

பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும் மற்றும் பலம் பெறும் சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள யோகப் பயிற்சியை செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button