ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ வீட்டில் மல்லிகை செடியை வளர்ப்பது எப்படி?

மண்
மல்லிகை பூ பல வகையிலான மண்ணில் வளரக்கூடிய ஒன்று ஆனால் இதற்கு நன்கு களிமண் அல்லது செம்மண்ணை பயன்படுத்தலாம்.

இடம்

மல்லிகை அதிகபடியான சூரிய ஒளியை விரும்பக்கூடிய ஒரு பூ. சூரிய ஒளி குறைவாக இருந்தால் அவை நன்றாக வளராது. இதனால் மல்லிகை வளர்பிற்கான இடத்தை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இவை கோடை காலம், மிதமான மழைக்காலம், லேசான பனிக்காலம் மற்றும் வெயில் நாட்களை தாங்கக்கூடியவை.

பரவல்
மல்லிகை தண்டு வெட்டுதல் முறைப் படி பரவக் கூடியவை. 4-6 அங்குல உயரம் உள்ள சற்று கடினமான (வளரும் பருவம் முடிந்த பிறகான புதர்களின் தண்டுகளை பயன்படுத்தலாம்) தண்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் தண்டுகளிலிருந்து பூக்கள் மற்றும் மொட்டுகளை அகற்ற வேண்டும், அவை இருந்தால் செடியின் சத்துக்களை ஈர்த்து வேர் விடுவதில் பாதிப்பு ஏற்படும். சில இலைகளை மட்டுமே வைத்து விட்டு மற்றவையை அகற்ற வேண்டும். இவற்றை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்கக் கூடாது. தண்டின் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தினுள் புதையுமாறு நன்கு வடிந்த மண்ணில் பயிரிட வேண்டும். பூந்தொட்டிகளில் வளர்த்தால் அவை நன்கு வடிகால் அமைக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்
செடியை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். நன்கு வடிந்த பின்பே மீண்டும் தண்ணிர் ஊற்ற வேண்டும். தட்ப வெப்ப நிலை மற்றும் வளரும் பருவத்தை பொருத்து தண்ணிரின் தேவை வேறுபடும். கோடை காலத்தில் அதிக அளவு நீர் தேவைப்படும்.

உரமூட்டுதல்
மாதம் ஒரு முறை கரிம உரம் பயன்படுத்த வேண்டும். மல்லிகைக்கு எரியம் (phosphorus) மிக்க உரம் மிகவும் முக்கியம். வாழைப்பழ தோலிகள் மற்றும் சமையலறை கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம். குளிர் காலத்தில உரமூட்டுவதை தவிர்ப்பது நல்லது.

கத்தரித்தல்
மல்லைகை பூக்கள் முழுவதுமாக மலர்ந்த பிறகு கத்தரித்தல் அவசியம். பூக்கள் மலர்ந்த பிறகு ஒரே நாளில் வாடிவிடும். முறைகாக கத்தரித்து வந்தால் தான் புதிய தண்டுகள் வளரும், அவையே புதிய பூக்கள் மலர உதவும்.1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button