முகப் பராமரிப்பு

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

குளிர் காலங்களில் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் சரும பிரச்சனை வறண்ட சருமம். நார்மல் சருமம் மற்றும் கலவை சருமம் உள்ளவர்களுக்கும் குளிர்காலங்களில் சருமம் வறண்டு சருமத்திற்கு ஈரப்பதத்தின் தேவை இருக்கும். ஆகவே இந்த பதிவை கட்டாயம் அனைவரும் படியுங்கள்.

மாயச்ச்சரைசர் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகவும், நீர்ச்சத்தோடும் நாள் முழுவதும் இருக்கும். ஒரு நாளில் ஒரு முறை மட்டும் மாயச்ச்சரைசெர் பயன்படுத்துவது போதுமானது. அந்த மாய்ச்சரைசர் வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் அதன் தரம் மற்றும் பயன் கட்டாயம் அதிகரிக்கும். வீட்டிலேயே தயாரிக்கும் மாயச்ச்சரைசர் பலன்கள் மற்றும் அதனைத் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்வதற்கு முன்னர் வறண்ட சருமம் உண்டாவதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

காரணங்கள்
சருமம் வறண்டு போவதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

ஈரப்பதம் குறைவது

வறண்ட சருமம் உண்டாவதற்கு முக்கிய காரணம் சருமம் ஈரப்பதத்தை இழப்பது. இதனால் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கு பலவீனமாகி, சருமம் சோர்வுடன் உயிரற்று காட்சியளித்து பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகின்றன. மாய்ச்சரைசிங் க்ரீம் பயன்படுத்துவதால் உங்கள் சருமதிற்கும் வெளிப்புற காரணிகளுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்பட்டு உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.

ஒழுங்கற்ற சரும பராமரிப்பு வழிமுறை பலர் தங்கள் சருமத்தை எதாவது ஒரு வழியில் பராமரித்து வருகின்றனர். ஆனால் அதில் பல தவறுகள் நடைபெறுகின்றன. அது எப்படி? சருமம் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணி, நீண்ட நேரம் வெந்நீரில் குளிக்கிறோம். ஆனால் அது நமது சருமத்திற்கு ஏற்றதல்ல. சருமத்திற்கு இது தீங்கு விளைவிக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. நாம் தவறு செய்யும் மற்றொரு செயல், சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது. சூரிய ஒளியில் வெளியில் செல்லும்போது, சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் செல்வது மிகவும் தவறான செயல் ஆகும்.

நீர்ச்சத்து குறைபாடு உடலுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் சருமம் வறண்டு போகிறது. நாம் அனைவரும் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். அது முற்றிலும் உண்மை. தினமும் அதிகமான அளவு தண்ணீர் குடிப்பதால், சருமத்தின் தரம் மேம்படுகிறது , மேலும் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகிறது.

மரபணு வறண்ட சருமம் உண்டாவதற்கு பாரம்பரியமும் ஒரு காரணம். தோல் செதில் நோய் என்ற நிலையால் வறண்ட சருமம் உண்டாகிறது. சில நேரம் உடலில் மீன் செதில் போன்ற வடிவங்கள் உண்டாகலாம்.

வறட்சியான சருமம் வறண்ட சருமத்திற்கு செம்பருத்தி ஏற்ற மூலப்பொருளாக இருப்பது ஏன் ? வறண்ட சருமத்திற்கு செம்பருத்தி மிகவும் ஏற்றது. சருமத்தை மென்மையாக்கி, மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க செம்பருத்தி உதவுகிறது. நீண்ட நாட்கள் தொடர்ந்து செம்பருத்தியை பயன்படுத்துவதால் சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறி வறட்சியை விரட்டுகிறது.

வயது முதிர்வை தடுக்க செம்பருத்தியில் வயது எதிர்ப்பு தன்மை இருப்பதால் உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி அழகை மேம்படுத்துகிறது. இந்த காரணத்தால் இதனை பல்வேறு மாய்ச்சரைசிங் க்ரீம் மற்றும் லோஷனில் பயன்படுத்தி வருகின்றனர். இது சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் சருமம் இளமையோடு இருக்க முடிகிறது.

வறண்ட சருமதிற்கான செம்பருத்தி மாயச்ச்சரைசர் தயாரிப்பது எப்படி? தேவையான பொருள்கள் 2 ஸ்பூன் செம்பருத்தி டீ 1 கப் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் இனிப்பு பாதாம் எண்ணெய் 1 வைட்டமின் ஈ மாத்திரை / 1 ஸ்பூன் வைடமின் ஈ பொடி 4-5 துளி பன்னீர் ஒரு ஸ்பூன் தேன்

செய்முறை செம்பருத்தி டீயை தூளாக்கிக் ஒருபுறம் எடுத்து வைத்துக் கொள்ளவும். சூடு தாங்கும் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் செம்பருத்தி டீயை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் தேன் சேர்க்கவும். பின்பு அதில் இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். கடைசியாக அதில் வைட்டமின் ஈ மாத்திரையை சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். ஒன்றாகக் கலந்த பின், அந்த கலவையை ஒரு சீஸ் துணி கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அந்த எண்ணெய்யை சற்று நேரம் ஆற விடவும். நன்றாக அந்த எண்ணெய் ஆறியவுடன், ஒரு நிமிடம் மிக்சியில் ஊற்றி அடித்துக் கொள்ளவும். காற்று புகாத ஒரு ஜாடியில் ஊற்றி அதனை பயன்படுத்தவும். நல்ல தீர்வுகள் கிடைக்க தினமும் இந்த மாய்ச்ச்சரைசரைப் பயன்படுத்தவும்.

1540194287

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button