27.2 C
Chennai
Thursday, May 16, 2024
5
சமையல் குறிப்புகள்அறுசுவை

கிளப் சாண்ட்விச் பரோட்டா சாப்பிட்டதுண்டா? இன்றே செய்து சாப்பிட்டு பாருங்கள்…

தேவையான பொருட்கள்

மேல் மாவிற்கு…

கோதுமை மாவு – 2 கப்,
உப்பு – தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு…

உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் – தலா 1,
தக்காளி – 1,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சீஸ் ஸ்லைஸ் – 2,
பனீர் – 4 துண்டுகள்,
சாட் மசாலாத்தூள் – 1 சிட்டிகை,
உப்பு, மிளகுத்தூள் – தேவையானஅளவு,
டொமேட்டோ கெட்ச்அப் – 3 டீஸ்பூன்,
மையோனைஸ் – 3 டீஸ்பூன்,
புதினா சட்னி – 3 டேபிள்ஸ்பூன்.

5
செய்முறை :

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சம அளவு உருண்டைகளாக பிரித்து உருட்டிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் அனைத்தையும் உப்பு சேர்த்து அரை பதத்திற்கு வேகவைத்து தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் மையோனைஸ், கெட்சப் சேர்த்து நன்றாகக் கலக்கி வைக்கவும். பனீரை துருவிக் கொள்ளவும். மூன்று உருண்டைகளை எடுத்து தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

பரிமாறும் முறை…

ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் கெட்சப் கலவையை பரப்பவும். அதன் மேல் வெந்த உருளைக்கிழங்கு, பீட்ரூட், சீஸை வைத்து சாட் மசாலாத்தூளை தூவி வைக்கவும். மற்றொரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள் ஸ்பூன் புதினா சட்னி தடவி, முதல் சப்பாத்தியின் மீது வைத்து அதன் மேல் கேரட், தக்காளி ஸ்லைஸ், துருவிய பனீரை தூவி மூன்றாவது சப்பாத்தியை வைத்து மூடவும். அதன் மேல் வெண்ணெய் தடவி கிரில் செய்து பல் குத்தும் குச்சியால் குத்தி பரிமாறவும்.

Related posts

இஞ்சி குழம்பு

nathan

ரமழான் ஸ்பேஷல்: நோன்பு கஞ்சி செய்முறை…

nathan

ஒயிட் சாஸ் பாஸ்தா

nathan

சூப்பரான பன்னீர் வெஜிடேபிள் குருமா

nathan

பீன்ஸ் புளிக்குழம்பு

nathan

மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா

nathan

குல்கந்து ரவை அல்வா

nathan

சுவையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி?

nathan

குல்பி

nathan