ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகம் பயப்படுபவரா நீங்கள் அப்போ இத செய்யுங்கள்!…

ஒரு மனிதனுக்கு பயம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அவர் வாழ்க்கை மீது பற்றுதல் உண்டாகி இருக்கிறது என்று அர்த்த‍ம். ஆனால் அந்த பயம் தேவையான இடங்களில் அவசியமான தருணங்களில் வந்தால் பயம் தொல்லையில்லை. ஆனால் அதே பயம், தேவையற்ற‍ இடங்களில், அவசியமற்ற‍ தருணங்களில் வந்தால் அந்த மாதிரி நேரங்களில் அதுபோன்ற தேவையற்ற பயங்களில் இருந்து வெளிவர எளிய வழிகள் உண்டு.

fear 04

* பயம் உங்கள் வாழ்வினை உடல் நலத்தினை அழிக்கின்றது என்பதனை நன்கு உணர வேண்டும்.

* எதனைப் பற்றி நீங்கள் பயப்படுகின்றீர்கள் என ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் உள் மனமே இதிலிருந்து வெளி வர வழி கூறும்.

* எதனையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என டென்ஷன் பட்டு குறுக்கு வழிகளில் செல்லாதீர்கள்.

* நிகழ் நொடியில் கவனம் செலுத்துங்கள்.

நிகழ்நொடியில்தான் பல செயல்களை சாதிக்க முடியும்.

• வேலை செய்யுங்கள். முழு கவனத்துடன் வேலை செய்யுங்கள்.

• ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.

• நீங்கள் தேவை என நினைத்தால் சற்றும் தயங்காது மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுங்கள்.

• நல்ல ஆக்கப்பூர்வமான புத்தகங்களைப் படியுங்கள்.

• முறையான உணவு மிக முக்கியம்.

• யோகா, தியானம், உடற்பயிற்சி இவை பெரிதும் உதவும்.

• கடவுள் நம்பிக்கை உடையவர் என்றால் பிரார்த்தனை செய்யுங்கள்.

• ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

• வாழ்வில் வெற்றி பெறுவதே உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தன்தோற்றத்தினைப் பற்றியும், அவரது நல்ல பண்பு, குண நலன்களை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button