29.5 C
Chennai
Wednesday, May 22, 2024
இனிப்பு வகைகள்அறுசுவை

மிக்க சுவையான எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள்

வெள்ளை எள் – 4 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலக்காய் – 6
நெய் – சிறிதளவு

ellurundai
செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். (நைசாக அரைக்காமல் சிறிது மொற மொறப்பாக அரைக்கவும்).

அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரையை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.

குறிப்பு: சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம். பாகு செய்யும் முன் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பாகு செய்யலாம். இதனால் வெல்லத்தில் இருக்கும் கல் நீக்கப்படுகிறது. மேலும் எள்ளுவை பொடிக்காமலும் சேர்த்து உருண்டை செய்யலாம்.

எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும், எள் உருண்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் போக்க முடியும்.

Related posts

ஆப்பிள் ஜூஸ்

nathan

பன்னீர் பஹடி

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி!…

sangika

சிக்கன் தோசை செய்வது எப்படி?

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

பிஸ்கட் சீஸ் சாட்

nathan

பொட்டேடோ வெட்ஜஸ்-potato veggies

nathan

சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி!…

sangika

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan