ld1344
அழகு குறிப்புகள்

பெண்களே தினமும் மேக்கப் போடாதீங்க

பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட தினமும் முகத்திற்கு மேக்கப் போடுவார்கள். தினமும் மேக்கப் போடுவதன் மூலம், மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, இயற்கை அழகை முற்றிலும் அழித்து, சருமத்தையே ஒரு மாதிரி அசிங்கமாக வெளிக்காட்டும்.

நல்ல தரமான பொருளாக இருந்தாலும், சருமத்தில் தினமும் பயன்படுத்தும் போது, அது சரும அழகையே கெடுத்துவிடும். சருமத்தின் ஈரப்பசையை அதிகரிக்க அன்றாடம் மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி நீண்ட நாட்கள் பயன்படுத்துவதால், அதில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தில் அரிப்புகள், சருமத்தை கருமையாக்குவது போன்றவற்றை ஏற்படுத்தி சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சருமத்திற்கு க்ரீம், சோப்பு மற்றும் பாடி லோசன் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள், மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். உதாரணமாக, சில ப்ளீச்சிங் க்ரீம்களில் மெர்குரி அதிகமாக இருக்கும். இவை சிறுநீரகங்களையும், நரம்புகளையும் பாதிக்கும். முகத்திற்கு போடும் பவுடரில் உள்ள கனிமங்களை தொடர்ந்து சுவாசித்தால், அவை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே நல்ல நறுமணம் உள்ளது என்று பவுடரை நிறைய பூசிக் கொள்ளாதீர்கள். ஷேவிங் க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர்களில் பாராபீன் என்னும் பதப்படுத்தும் பொருள் உள்ளது. ஆகவே இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, சரும புற்றுநோயும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

ld1344

Related posts

கருமை மாறி முகத்துக்கு பொலிவு தரும் கற்றாழை

nathan

புரட்டாசி மாத ராசிபலன் 2022 :12 பலன்கள்

nathan

சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்க இத செய்யுங்கள்!…

sangika

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் அசீமின் மனைவியை பார்த்து இருக்கீங்களா …

nathan

தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… வடகொரியா அதிபர் கிம்

nathan

இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்……

sangika

பளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

nathan

சரும சுருக்கத்தை போக்கும் டைட்னிங் பேஷியல்

nathan

சீரியல் நடிகை பரீனாவை கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

nathan