4 1545197753
ஆரோக்கிய உணவு

எச்சரிக்கை இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க…

பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக குழந்தைகளுக்கு பழங்களும் காய்கறிகளும் எண்ணற்ற நன்மைகளைச் செய்கின்றன. இருந்தாலும் சில பழங்களை சாப்பிடக் கொடுக்கும்போது அல்லது மற்ற சில பழங்களுடன் இணைத்து கொடுக்கும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பலவிதமான பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிடுது ஆரோக்கியமற்ற ஒரு செயல் மட்டுமில்லாமல் சில நேரம் இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் மிகப் பெரிய அபாயத்தையும் உண்டாக்கலாம். என்றுமே சேர்த்து சாப்பிடக் கூடாத சில பழக் கலவை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

ஆரஞ்சு மற்றும் கேரட் கேரட் மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.

பப்பாளி மற்றும் எலுமிச்சை எலுமிச்சை மற்றும் பப்பாளியை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது. இது ஒரு மோசமான காம்பினேஷன் ஆகும். இதனை சேர்த்து சாப்பிடுவதால், இரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் சமச்சீரின்மை ஆகிவை உண்டாகின்றன. மேலும் இது குழந்தைகளுக்கு அதிக தீங்கை உண்டாக்குவதாக உள்ளது.

ஆரஞ்சு மற்றும் பால் பால் மற்றும் ஆரஞ்சை ஒன்றாக சாப்பிடுவதால், செரிமானம் கடினமாகிறது , மேலும் எண்ணற்ற உடல் உபாதைகள் உண்டாகின்றது. பால் சேர்த்த உணவை உட்கொள்ளும்போது அதில் ஆரஞ்சு பழத்தை சேர்ப்பதால், அந்தப் பழத்தில் உள்ள அமிலம் , உணவின் செரிமானத்திற்கு பொறுப்பாக இருக்கும் ஸ்டார்ச்சை முற்றிலும் அழித்து விடுகிறது. ஆகவே பால் கலந்த உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்ப்பதால் நீங்கள் அஜீரணத்திற்கு வழி வகுத்துக் கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கொய்யா மற்றும் வாழைப்பழம் கொய்யா மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக உட்கொள்வதால் அமில நோய் , குமட்டல், வாய்வு தொந்தரவு மற்றும் தொடர்ச்சியான தலைவலி போன்றவை உண்டாகின்றன.

காய்கறிகள் மற்றும் பழங்கள் காய்கறி மற்றும் பழத்தை ஒருபோதும் இணைத்து சாப்பிடக்கூடாது. பழங்களில் சர்க்கரை அளவ அதிகம் இருப்பதால், ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். இவை அதிக நேரம் வயிற்றில் இருப்பதால் வயிற்றில் இவை புளித்துப் போவதால் நச்சுகளை வெளியிடுகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, தலைவலி, தொற்று பாதிப்பு, மற்றும் வயிற்று வலி போன்றவை உண்டாகின்றன.

அன்னாசிப்பழம் மற்றும் பால் அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலைன் என்னும் கூறு பாலுடன் இணைவதால் தொடர்ச்சியான பல தொந்தரவுகள் உடலில் ஏற்படுகின்றன. வாய்வு, குமட்டல், தொற்று பாதிப்பு , தலைவலி, வயிற்றுவலி போன்றவை உண்டாவதால் இந்த இணைப்பை முயற்சிக்க வேண்டாம்.

வாழைப்பழம் மற்றும் புட்டிங் வாழைப்பழத்துடன் புட்டிங் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் கடினமாகி, நச்சு உற்பத்தியை உடலில் ஊக்குவிக்கும். இதனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உண்டாகிறது.

4 1545197753

Related posts

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

nathan

எப்பவும் பழங்களை இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடாதீங்க…தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

தமிழர்கள் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள்?

nathan

தெரிஞ்சிக்கங்க…அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டின் இல்லாத மைதா மாவு

nathan

இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நீரிழிவு நோயாளிகள் குக்கர் சாதத்தினை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஏமாந்து விடாதீர்கள்.விழித்து கொள்ளுங்கள்..!!

nathan

உங்கள் உதடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றனவா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan