அலங்காரம்ஃபேஷன்

இத்த‍னை வகைகளா? – பெண்கள் விரும்பி அணியும் சல்வார்!…

ஆண்களை விட பெண்களுக்கு ஆடை வடிவமைப்பில் பல ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் முன்னுரிமை தருகின்றனர். அந்த வகையில் பெண்கள் விரும்பி அணியும் ஆடை வகைகளில் ஒன்றுதான் இந்த சல்வார். இதனை குறித்து இங்கு காண்போம்.

பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்

பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் இதனை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.

பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட். இந்த சல்வார் வகைகள் பல இருந்தாலும் அவற்றில் முதன்மையானவைகளை இங்கு காண்போம்.

salwar

1) சல்வார் சூட் ( #SalwarSuit )

சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம்.

எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 – 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.

2) தோத்தி சல்வார் ( #DhotiSalwar )

பெண்கள், தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும்முன்னே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கி விட்டனர்.

கீழ்ப்பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப் பட்டுள்ளன.

இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்ற வகையில் வண்ண மயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது.

கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன.

இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.

3) பெட்டல் பேண்ட் ( Petal Paint Salwar)

கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழே வரவர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது.

இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப் பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப் படுகிறது.

இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.

4) பாட்டியாலா ( Patiala Salwar )

பஞ்சாப் பெண்களின் விருப்பமான சல்வார் வகை பாட்டியாலா. அதிக மடிப்புகளு டன் அகலமான வடிவமைப்புடன் இந்த வகை சல்வார் நல்ல காற்றோட்டமான ஆடை வகை. எனவே கோடை காலத்தில் அணிய ஏற்றதாக உள்ளது.

5) ஆப்கான் சல்வார் ( Afghani Salwar )

இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ள வாறு தைக்கப்பட்டிருக்கும்.

மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.

6) பலாஸோ (Palazzo Salwar )

விதவிதமா பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது.

இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.

7) ஷகாராஸ் ( #Shagaras )

இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ண பட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும்.

அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button